தமிழகத்தில் ஜனநாயகம் நோயாளியாக உள்ளது... புதுக்கோட்டை கண்டன கூட்டத்தில் ஸ்டாலின் காட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சின்னப்பா பூங்காவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்தார். அப்போதே 2011ல் அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது என்று சட்டசபையிலேயே திமுக குறிப்பிட்டது. அடிக்கல் நாட்டு விழா நடந்து கிடப்பில் போட்டு 110 விதியின் கீழ் மீண்டும் அறிவித்து கடந்த 9ம் தேதி திறப்பு விழா நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திமுக எம்எல்ஏக்கள் இதை தெரிவித்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே பினாமி ஆட்சி நடத்தும் முதல்வரும், அந்தத் துறை அமைச்சரும் எம்எல்ஏக்களை கைது செய்தனர். கைது செய்வதால் நாங்கள் சுருண்டு போய்விட மாட்டோம், அந்தக் கைதை கண்டித்துத் தான் இந்த ஆர்ப்பாட்டம்.

 ஜனாநாயகம் நோயாளியானது

ஜனாநாயகம் நோயாளியானது

கைது செய்வதால் எங்கள் எம்எல்ஏக்களுக்கு கவுரவக் குறைச்சல் இல்லை. பினாமி ஆட்சி நடத்தம்
ஜனநாயகம் நோயாளியாகி இருக்கிறது. சிகிச்சை பெற வேண்டியது நோயாளிகள் அல்ல ஆட்சியாளர்களே.அதனால்
தான் ரிப்பன் எடுத்து வெட்டும் போது முதல்வர் பழனிசாமி தன்னுடைய கையை வெட்டிக்கொண்டு முதலில்

 பயம்

பயம்

ஓபிஎஸ்ஸை அவுட் பேஷன்ட் என்றே சொல்வேன், முதல்வர் பழனிசாமி அவரே மருத்துவமனையை திறந்து வைத்து புதுக்கோட்டை மருத்துவமனையில் முதல் அவுட்பேஷனாக அட்மிட் ஆகியுள்ளார். ஏற்கனவே இந்த மருத்துவமனை கட்டிய ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் நிலை என்ன ஆச்சு, அதை மக்களுக்கு தெரிவித்துவிடுவார்களோ என்பது தான் அதிமுகவின் பயம்.

 அநாகரிக அரசியல்

அநாகரிக அரசியல்

அரசு விழாக்கள் என்றால் கருணாநிதி காலத்தில், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருந்தால் அதில் அந்த
தொகுதி சார்ந்த அனைத்து எம்எல்ஏக்களையும் வரவழைத்து கருத்து கேட்கப்படும். அநாகரிக அரசியலை பினாமி
ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு தொடங்கி வைத்துள்ளது. அதனை கண்டிக்கவே இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

 அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

திமுக சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிட்ட பின்னர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது
காவல்துறை அனுமதி தருமா என்று கேட்டு சொல்லுங்கள் என்று சொன்னேன். உடனே அனுமதி தரவும் இல்லை,
பார்க்கலாம் பார்க்கலாம் என்று தட்டி கழித்தார்கள்.

 தொடரும்

தொடரும்

இதையடுத்து மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி வாங்குங்கள் என்று சொன்னேன். அதன் பிறகு
அனுமதி பெற்று ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். ஆர்ப்பாட்டத்தோடு அனைத்தும் முடிந்து விடாது, அக்கிரமங்களை
செய்யும் அநியாய ஆட்சிக்கு எதிராக திமுகவின் கண்டனங்கள் தொடரும்.முன்எச்சரிக்கை கைது என்று எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிச்சயம் வெற்றி பெறுவோம். இவையெல்லாம் அதிகாரிகளை எச்சரிப்பதற்காக அல்ல திமுகவின் ஜனநாயகத்தை நிலைநாட்டவே, என்று தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president Stalin condemns tamilnadu's is not facing any democratic rule
Please Wait while comments are loading...