For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொன்னாருக்கு 16 வயசு உங்களுக்குத் தெரியாதா? - மு.க.ஸ்டாலின் கிண்டல்!

கருணாநிதியின் வைரவிழா வயதானோருக்கான விழா என்று விமர்சித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயது என்று ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா வயதானோருக்கான விழா என்று சொல்லி மூத்த குடிமக்களை பொன்.ராதாகிருஷ்ணன் கொச்சைப்படுத்தியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

காயிதே மில்லத்தின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

 M.K.Stalin slams that is Pon.Radhakrishnan 16 years old?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழை ஆட்சி மொழியாக்க பாடுபட்டவர் காயிதே மில்லத் என்று தெரிவித்தார். எனவே மத்திய அரசு தேவையில்லாமல் எந்த அளவிற்கு இந்தியை திணிக்கிற முயற்சியில் ஈடுபடுகிறார்களோ அதே வேகத்தில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கேட்டுக் கொண்டார்.

கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துகள் குறித்த கேள்விக்கும் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று கூறியது பொன்னாரின் அரசியல் நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்தார். வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று சொன்ன பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயது என்றும் கிண்டல் செய்தார்.

கருணாநிதிக்காக கொண்டாடப்பட்ட வைரவிழாவை வயதானோவர்களுக்கான விழா என்று சொல்லி பொன்.ராதாகிருஷ்ணன் மூத்த குடிமக்களை கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். மத்தியல் இருக்கும் ஆட்சி மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பதை எதிர்ப்பதற்காகவே வைரவிழாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்றனர் என்றும் ஸ்டாலின் கூறினார்.

English summary
DMK working president Stalin asks is Pon.Radhakrishnan 16 years old because of his comment over diamond jubilee celebration
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X