மக்கள் கருணாநிதியை 6வது முறையாக முதல்வராக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
திருவாரூர்: தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியை 6 ஆவது முறையாக முதல்வராக்க திமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
திருவாரூரில் திங்கள்கிழமை கிளை, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சிக் அப்பாற்பட்டவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை நிறைவு செய்த பின்னர் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசினார் மு.க.ஸ்டாலின்.

மாணவர்களுக்கு முக்கியத்துவம்:
அப்போது, "கூட்டத்தில் மாணவர்களாகிய நாங்கள் சமச்சீர்க் கல்வியில் பயன்பெற்றவர்கள், அதனால் திமுக மீது பற்றுக் கொண்டவராக இருக்கிறோம் என்றனர். தவிர கிளைக்கழகத்தில் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

திமுகவின் வெற்றி:
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற வைப்போம் என்றும், மேல்நிலைப் பொறுப்பாளர்கள் தங்களை அரவணைத்துச் செல்ல வேண்டும், கட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உரிய அங்கீகாரம்:
உண்மையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அதிமுகவினரால் பிரச்னை ஏற்படும் போது உதவ வேண்டும், தேர்தல் காலங்களில் அதிக வாக்கு கள் பெற்றுக்கொடுப்பவர்களை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும், நிர்வாகிகள் கூட்டம் அடிக்கடி நடத்த வேண்டும்.

144 தடை உத்தரவு:
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஒருவர் 144 தடை உத்தரவினால் 2014 மக்களவைத் தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்தது என்று கூறினார். அது உண்மை தான், ஏனெனில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ள நிலையில் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.

தேர்தல் கமிஷனோடு வெற்றி:
ஆனால் தேர்தல் கமிஷன், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சியும் கோரிக்கை வைக்காத போது, ஏன் தேர்தலுக்கு முந்தைய நாள் 144 தடை உத்தரவு போட வேண்டும். அதற்கு காரணம் அதிமுக தேர்தல் கமிஷனோடு கூட்டணி வைத்து போட்டியிட்டது, அதனால் அக்கட்சி வெற்றிப் பெற்றது.

தோல்வியால் துவளவில்லை:
திமுகவுக்கு தேர்தல் வெற்றித் தோல்வி புதிதல்ல. இதுபோல் பல தேர்தல்களை சந்தித்துள்ளது. தோல்வியை கண்டு துவண்டு போகும் கட்சியல்ல. திமுக மக்களவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்தப் போதும், தற்போது எழுச்சியோடு, உணர்ச்சியோடு, ஆர்வத்தோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மக்களின் கட்சி திமுக:
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி காட்சி ஆட்சியாக இருந்தது. தற்போது பொம்மை ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி திமுக தான்.

மீண்டும் முதல்வர்:
6 ஆவது முறையாக திமுக தலைவர் கருணாநிதியை முதல்வராக்க வேண்டுமென்பதை லட்சியமாகக் கொண்டு திமுக வினர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்" என்று பேசினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications