த்தூ.... விவகாரம்: விஜயகாந்த் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த போலீஸுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: பத்திரிகையாளர்களை நோக்கி ..த்தூ என தேமுதிக தலைவர் விஜயகாந்த் காறிதுப்பியது தொடர்பான புகார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் கடந்த மாதம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜயகாந்த், நிலை தவறியவராக ....த்தூ என காறி துப்பினார். இது கடும் விமர்சனங்களை உருவாக்கியது.
இது குறித்து பத்திரிக்கையாளர் தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் விஜயகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காவல் துறை தலைவர், சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர், மயிலாப்பூர் காவல் துறை துணை ஆணையர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டது.

கடந்த டிசம்பர் 28-ந் தேதி இணையம் வழியாக புகார் பதிவு செய்து, அதன் நகல் காவல்துறைக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், போலீஸார் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் விஜயகாந்த் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, தேவராஜின் மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் கிடைத்தால் அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப் பதிவு செய்வதற்கு தேவையான முகாந்திரம் இல்லாவிட்டால், அதுகுறித்து புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications