காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்க்கும் மனு தள்ளுபடி
சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து பேராசிரியர் சரசுவதி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பேராசிரியர் சரசுவதி அண்மையில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இலங்கையில் 2007-ம் ஆண்டு முதல் 2009 வரை ஆயிரக்கணக்கான தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏராளமான மனித உரிமை மீறலும் நடந்துள்ளன.
இந் நிலையில் வருகிற நவம்பர் 10 முதல் 16-ந்தேதி வரை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்ட நாட்டில் இதுபோன்ற மாநாடு நடத்துவது உகந்தது அல்ல. எனவே இம் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று கடந்த செப்டம்பர் மாதம் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினேன்.
ஆனால் இக் கடிதத்துக்கு இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இம் மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி என்.சத்திய நாராயணன் ஆகியோர் கடந்த வாரம் விசாரித்து ஒத்திவைக்கப்பட்டது. இன்று இம்மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இம் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications