கோவையில் கைது செய்யப்பட்ட 5 மாவோயிஸ்டுகளுக்கு நிபந்தனை ஜாமீன்!
சென்னை: கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
கோவை அருகே கருமத்தம்பட்டி- அன்னூர் சாலையில் கடந்த ஆண்டு 5 மாவோயிஸ்டுகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கேரளாவைச் சேர்ந்த ரூபேஷ், மனைவி சைனா மற்றும் அனூப், மதுரை கார்த்தி, கடலூர் ஈஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கடந்த மே மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அனைவரையும் கியூ பிரிவு போலீசார் கஸ்டடியில் எடுத்தும் விசாரித்தனர். இதனிடையே 5 மாவோயிஸ்டுகள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டன. பின்னர் 5 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனால் 5 பேரும் ஒரு ஆண்டுக்கு ஜாமீனில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மாவோயிஸ்டுகள் 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இம்மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம், 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். கியூ பிரிவு காவல்துறையினர் முன் 5 பேரும் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது நிபந்தனை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications