Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம் இடிக்கப்படுமா?... தனி நீதிபதி தீர்ப்புக்குப் பின் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து தரை மட்டமான 11 மாடி அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் உள்ள இன்னொரு 11 மாடிக் குடியிருப்பை இடிப்பது தொடர்பாக விவகாரத்தில் தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கின் முடிவைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்பட 61 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

Madras hc issues interim order on Moulivakkam 11 storey building

இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகே இன்னொரு 11 மாடிக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. அதை இடித்துத் தள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. இதுதொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தொடர்ந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் உட்பட பலர் ஆஜராகினார்கள்.

விசாரணையின்போது அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி வாதிடுகையில், மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடம் அருகே மற்றொரு 11 மாடி கட்டிடம் உள்ளது. இதை இடிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்துள்ளார். எனவே, இந்த பொதுநல வழக்குகளுடன், தனி நீதிபதி முன்புள்ள வழக்கையும் சேர்த்து நீங்கள் விசாரிக்கவேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில், மற்றொரு 11 மாடி கட்டிடம் இடிந்து விழாமல் உள்ளது. அந்த கட்டிடத்தையும் இடிக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இடி, மின்னல் தாக்கியதால் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு போதிய ஆதரங்கள் உள்ளன. தற்போது அங்குள்ள 11 மாடி கட்டிடம் உறுதியாக உள்ளது என்று கட்டிட நிபுணர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். எனவே, அந்த கட்டிடத்தை இடிக்க தேவையில்லை. அந்த கட்டிடம் இடிந்து விழுந்தால், அதற்கான முழு பொறுப்பை ஏற்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளது.

எனவே, தனி நீதிபதி முன்பு நிலுவையில் உள்ள வழக்கை முதலில் விசாரித்து முடிக்கவேண்டும். அதற்காக, அரசு தரப்பு வக்கீல், மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள், கட்டுமான நிறுவனத்தின் வக்கீல்கள் அனைவரும் வருகிற 23ம் தேதி தனி நீதிபதி முன்பு ஆஜராகி, அந்த வழக்கிற்கான இறுதி வாதங்களை செய்யவேண்டும். இதற்காக கால அவகாசம் எதுவும் கேட்க கூடாது.

அந்த வழக்கின் மீதான இறுதி முடிவை தனி நீதிபதி எடுத்த பின்னர், இந்த பொதுநல வழக்குகளை நாங்கள் விசாரிக்கின்றோம். இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கின்றோம் என்று உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+