எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமா ஹைகோர்ட்?
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என இன்றைய விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்பது திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு. இதனுடன் தகுதி நீக்கத்துக்கு எதிரான தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளன.

இன்று விசாரணை
இந்த இரு வழக்குகள் மீதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன உத்தரவு?
ஏற்கனவே இந்த வழக்கில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த தடை நீட்டிக்கப்படலாம் அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.

தகுதி நீக்கத்துக்கு தடை?
அதேபோல் கர்நாடகாவின் எதியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்த காரணத்தாலேயே தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பதை மேற்கோள் காட்டி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்கலாம்.

நீதிமன்ற முடிவு இறுதி?
அத்துடன் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டு தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் வாக்களிக்க அனுமதிக்கலாம். அதேநேரத்தில் இத விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுதான் இறுதி எனவும் உத்தரவிட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications