சுயமரியாதை திருமண முறைக்கு தடை கோரிய மனு சென்னை ஹைகோர்ட்டில் டிஸ்மிஸ்!!
சென்னை: சுயமரியாதை திருமண முறைக்கு தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசுவத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், இந்து திருமணச் சட்டம், 1955-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்து மதத்தில் காலகாலமாக பின்பற்றி வரும் திருமண சடங்குகளை இந்த சட்டம் உறுதி செய்கிறது. திருமணத்தின்போது, அக்னி குண்டத்துக்கு முன்பு மணமக்கள் மேற்கொள்ளும் 7 நிலை சடங்குகள் செய்து முடிந்ததும், அந்த திருமணம் நிறைவடைகிறது.

ஆனால், தமிழகத்தில் நாத்திக கொள்கை கொண்ட அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்த கட்சி, 1967ம் ஆண்டு, இந்து திருமணச் சட்டத்தில் கூடுதலாக ஒரு பிரிவை சேர்த்து திருத்தம் செய்தது. அதாவது, சுயமரியாதை மற்றும் சீர்த்திருத்த திருமணம் என்பதை சேர்க்கப்பட்டது. இந்து திருமண விழாவில், நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் கலந்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த சுயமரியாதை, சீர்த்திருத்த திருமண நிகழ்ச்சியில் 2 பேர் முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது. இதை திருமண ஒப்பந்தம் என்று கூறுகின்றனர். திருமணம் என்பது இருதரப்பு செய்துக்கொள்ளும் ஒப்பந்தம் கிடையாது. இந்த திருமண முறை இந்து மத கொள்கைகளை ஒட்டு மொத்தமாக வீணடிக்கிறது. மோதிரம் மாற்றி திருமணம் செய்வது என்பது இந்து மதத்தில் இல்லாத பழக்கம். ஒரு மத நடவடிக்கையை மற்றொரு மதத்தின் மீது திணிப்பது விதிமீறல் ஆகும். ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்து மத சாஸ்திரம், சம்பிரதாயத்தின் அடிப்படையில் திருமணம் நடைபெறவேண்டும்.
எனவே, சீர்த்திருத்தம் மற்றும் சுயமரியாதை திருமணம் என்று இந்து திருமண சட்டத்தில் ஒரு பிரிவை சேர்த்தது சட்ட விரோதம் என்று அறிவித்து, இந்த திருமண முறையை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீர்த்திருத்த மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. விரும்பியவர்கள் விரும்பிய முறையில் திருமணம் செய்துக்கொள்ளலாம். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டார்கள்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications