For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவிழாக்களில் “ரெக்கார்ட்” டான்ஸ் ஆட உயர் நீதிமன்றம் தடை

Google Oneindia Tamil News

Madras High Court shuts door on ‘record dances’
சென்னை: கிட்டதட்ட 35 கிராமங்களிடம் இருந்து திருவிழாக்களில் ஆடப்படும் "ரெக்கார்ட்" டான்ஸ் நிகழ்ச்சிகளை அனுமதிக்க வேண்டும் என்று வந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்து, ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில் நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் கூறிய தீர்ப்பில், "திருவிழா என்பது தனிநபர் கொடுக்கும் விருந்து போன்ற நிகழ்வல்ல.இதுபோன்ற தவறான செயல்பாடுகள்தான் பெண்களைப் பற்றிய இளைஞர்களின் கண்ணோட்டத்தை தவறாக சித்தரிக்கின்றது" என்று கூறியுள்ளனர்.

நீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் இது போன்ற நிகழ்ச்சிகளை முற்றிலுமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது. சமூகத்தை தவறான பாதைக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் அழைத்துச் செல்கின்றன என்றும் கூறியுள்ளது. இந்த முடிவை மீறி நடக்கும் கிராமத்தினர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும் நீதிபதி புஷ்பா சத்யநாராணன் தெரிவித்துள்ளார்.

"இந்த முடிவானது தடை செய்யக்கோரி மனு அளித்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என நினைக்கின்றோம்.மேலும், இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் மூலம் இந்த தடை உத்தரவு பற்றிய செய்தி அளிக்கப்படுள்ளது" என்றும் நீதிபதி தனது உத்தரவின்போது தெரிவித்தார்.

English summary
The Madras High Court on Friday dismissed 35 petitions from various villages in South Tamil Nadu, seeking permission to hold dance and music programmes in connection with temple festivals.The Bench of Justice Pushpa Sathyanarayana held that "it cannot be a party to unlawful activities, including indecent representation of women and luring youngsters to the wrong path".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X