For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. கை ரேகை பதிவு செய்த டாக்டர் பாலாஜிக்கு பதவி உயர்வு... தடை கேட்ட வழக்கில் நாளை தீர்ப்பு!

ஜெயலலிதா கைரேகையை பதிவு செய்த டாக்டர் பாலாஜிக்கு அளித்த பதவி உயர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் ஹைகோர்ட் கூறியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்த டாக்டர் பாலாஜிக்கு அளித்த பதவி உயர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகை வேட்பாளர்களுக்கான பி பார்ம் படிவத்தில் இடம்பெற்றது. இந்த கைரேகை பதிவின் போது ஜெயலலிதா நல்ல உடல்நிலையில் இருந்ததாகவும், கையில் வலி இருப்பதால் கையெழுத்திடாமல் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டதாகவும் டாக்டர் பாலாஜி சான்று கூறியிருந்தார்.

 Madras Highcourt to pronounce the judgement tomorrow regarding Dr. Balaji's Promotion

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பேராசிரியரான டாக்டர் பாலாஜிக்கு தமிழக அரசு உடலுறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமனம் வழங்கியது.

இந்த நியமனத்தை எதிர்த்து மாற்றம் இந்தியா அமைப்பை சேர்ந்த பாடம் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் மூத்த மருத்துவர்கள் இருக்கும் நிலையில் டாக்டர் பாலாஜிக்கு பதவி உயர்வு அளிக்கக் கூடாது என்றும் அதனை ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆணையத்தின் பொதுக்குழு செயற்குழு ஒப்புதல் இல்லாமல் விதிகளுக்கு புறம்பாக பாலாஜி நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

English summary
Madras Highcourt to pronounce the judgement tomorrow regarding the promotion given to DR Balaji who is a victim for recording Jayalalitha's thumb impression on the candidates form while she is at hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X