கதிராமங்கலம் மக்களுக்கு ஆதவாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள் கடந்த மே மாதம் முதலே போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும் கதிராமங்கலம் கிராமத்துக்கு நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Madras university students conducts protest supporting Kathiramangalam Village People

தஞ்சை, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் கதிராமங்கலம் மக்களுகுக் ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். பல்கலைக் கழக வளாகத்துக்குள்ளேயே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madras university students conducts protest supporting Kathiramangalam Village People. They were protest in the University campus.
Please Wait while comments are loading...