"காவிரிய வச்சுக்கோ...அம்மா கொடு..."... மொதல்ல இவங்களைப் பிடிச்சு உள்ள போடனும்....!
சென்னை: அதிமுகவினரின் முட்டாளத்தனத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அவர்கள் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக நினைத்துக் கொண்டு ஒட்டும் போஸ்டர்களும், அதில் இடம் பெறும் வாசகங்களும் - தமிழக மக்களைக் கொதிக்க வைத்து வருகிறது.
ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் ஒட்டும் போஸ்டர்கள்தான் மகா கொடுமையாக இருக்கிறது.
தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினைகளையெல்லாம் படு கேவலப்படுத்தி வருகிறார்கள் இந்த முட்டாள் தொண்டர்கள். குறிப்பாக காவிரி பிரச்சினையை இவர்கள் சிறுமைப்படுத்தி போஸ்டர் ஒட்டுவதைப் பார்த்து விவசாயிகள் கொதித்துப் போய் உள்ளனர்.

மதுரை மடத்தனம்
மதுரையைச் சேர்ந்தவர் "கிரம்மர்" சுரேஷ். இவருக்கு காவிரிப் பிரச்சினையின் "கிராமர்" சுத்தமாக தெரியவில்லை என்பது மதுரைக்கே பெரும் அவமானம். இவர் ஒட்டியுள்ள போஸ்டர்களைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

கடுப்பேற்றும் வாசகம்
இவர் ஒட்டியுள்ள ஒரு போஸ்டரில் வாசகத்தைப் பாருங்கள்.. நீங்களும் கடுப்பாகிப் போவீர்கள்.

மத்திய தொகுதி "மண்டு"!
இந்த "மண்டு" சுரேஷ், மதுரை மத்திய தொகுதி அதிமுக செயலாளராக இருக்கிறார்.

காவிரிய வச்சுக்கோ
அந்த போஸ்டரில், காவிரிய வச்சுக்கோ. அம்மா குடு. அம்மா (கூட இரண்டு கால் போட்டிருக்கிறார்) வா (கூட ஒரு கால்). தேம்பும் தமிழகம்... ஒருபக்கம் ஜெயலலிதா சிரிக்கும் படம், இன்னொரு பக்கம் ஒரு குட்டிப் பாப்பா கையில் ரப்பரைப் பிடித்தபடி அழும் படம்.. பாப்பா பார்க்க குட்டி ஜெயலலிதா போலவே இருக்கிறது (கூகுள்ள வலை வீசித் தேடிப் பிடிச்ச படம் போல)

செல்லூர் ராஜு - ராஜன் செல்லப்பா
போஸ்டரில் அமைச்சர் செல்லூர் ராஜு, மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோரின் பெயர்களுக்குக் கீழே கிரம்மர் சுரேஷ் என அவரது பெயரையும் போட்டுள்ளார்.

திருமங்கலத்திலும் சில மண்டுகள்!
திருமங்கலத்திலும் இதேபோன்று காவிரிய வச்சுக்கோ என்று கூறி சில மண்டுகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

வருத்தத்தில் விவசாயிகள்
இவர்களின் இந்த கிறுக்குத்தனமான போஸ்டரைப் பார்த்து விவசாயிகள் கோபமடைந்துள்ளனர். காவிரிப் பிரச்சினையில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வர தமிழகம் பட்ட பாடு என்ன, எத்தனை உயிர்ப் போராட்டங்கள், எத்தனை வழக்குகள், கஷ்டங்கள், வேதனைகள், அவமானங்கள். இதையெல்லாம் இதுபோன்ற மடையர்கள் சிறுமைப்படுத்துவதை அதிமுக தலைமை எப்படி வேடிக்கை பார்க்கிறது என்று அவர்கள் கேட்கிறார்கள்.

விழா நடத்தியது வேஸ்டாப் போச்சே
மேலும் காவிரி தீர்ப்பை பெற்றுத் தந்ததற்காக ஜெயலலிதாவுக்கு விழாவெல்லாம் நடத்தினோமோ, ஆனால் இவரது கட்சியினர் இப்படி இந்த விவகாரத்தையே அசிங்கப்படுத்தி வருகிறார்களே என்றும் விவசாயிகள் புண்பட்டுப் போய்ப் பேசுகிறார்கள்.
ஆதங்கத்தை வெளிப்படுத்தும்போது, சற்று அறிவையும் பயன்படுத்துங்கள் தொண்டர்களே..!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications