மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க பிச்சை எடுக்கலாம், கூலி வேலை பார்க்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி!
மதுரை: மனைவி, குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்க ரோட்டில் போய் பிச்சை எடுக்கலாம். கூலி வேலை பார்த்து சம்பாதிக்கலாம். அந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக்க மட்டும் முயலக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியாக கூறியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜன். இவருக்கும் ரங்கசுபத்ரா என்பவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையி்ல கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். குழந்தை தாயுடன் வளர்ந்து வருகிறLு.

இந்த நிலையில் கோவில்பட்டி குடும்பநீதிமன்றத்தில் சுபத்ரா ஒரு வழக்குப் போட்டார். அதில்,குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தங்குவதற்கு வீடு, ஜீவனாம்சம், இழப்பீடு வழங்க உத்தரவிட அவர் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், மாதம் ரூ. 10,000 ஜீவனாம்சம், வீட்டு வாடகைக்காக ரூ 10,000 மற்றும் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. மேலும், சீர்வரிசை பொருட்களை திரும்ப வழங்கவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செல்வராஜன். மனுவை விசாரித்த நீதிமன்றம், வீட்டு வாடகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க தேவையில்லை என்றும், ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சமும், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்கினால் போதும் என்றும் உத்தரவிட்டது.
இதையும் எதிர்த்து செல்வராஜன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி தேவதாஸ் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். அவர் கூறுகையில்,இரு தரப்பினரின் வாதங்களையும் மிகுந்த கவலையோடு கேட்டேன். உடல் ரீதியான பாதிப்பை விட மன ரீதியான பாதிப்பு கொடுமையானது. சுபத்ராவுக்கு மனுதாரர் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். மனுதாரர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. சட்டப்படி சுபத்ராவுக்கு மனுதாரர் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.
மனுதாரர் என்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளதாகவும், வேலை எதுவும் இல்லாமல் இருப்பதாகவும் கூறுகிறார். இதுபோன்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க வேலையில்லை என்று கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது.
மனுதாரர் கூலி வேலை கூட செய்யலாம். பிச்சை எடுத்தாவது மனைவி மற்றும் குழந்தைகளின் சாப்பாட்டுக்காக ஜீவனாம்சம் வழங்குவதில் தவறு கிடையாது என்று கூறி செல்வராஜனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications