அரிசி டப்பாவுல பீரோ சாவியை வைக்காதீங்க, கையில் மிளகாய்ப் பொடி வச்சுக்கங்க – பெண்களுக்கு அட்வைஸ்!
மதுரை: மதுரையில் பெருகி வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க பெண்கள் எப்போதும் கைவசம் மிளகாய்பொடி வைத்திருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.
மதுரையில் அடிக்கடி நடைபெறும் நகை பறிப்பில் இருந்து தப்பிக்கவும், வீடுகளில் திருட்டு நடக்காமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் மல்லிகை குடியிருப்பில் நடந்தது.
அதில் குற்றப்பிரிவு துணை கமிஷனர் சாமந்த்ரோகன் ராஜேந்திரா பெண்களுக்கு ஆலோசனை கூறினார்.
நகைக்கடை மாடல் இல்லை:
வெளியே செல்லும் போது நகைக்கடை விளம்பர பெண் போன்று அதிக நகைகளை அணிந்து செல்ல வேண்டாம். பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷனில் திருடர்கள் குறித்து எச்சரிக்கும்போது பயத்தில் உங்கள் பையை நீங்கள் ஆய்வு செய்யக்கூடாது.
அரிசி டப்பாவில் பீரோ சாவி:
பீரோ சாவியை பருப்பு அரிசி டப்பாக்களில் வைக்க வேண்டாம். வங்கியில் பணம் எடுக்கும்போது அறிமுகமில்லாதவர் தெரிந்தவர் போல் பேசி கவனத்தை திசை திருப்பக்கூடும். அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சுழற்சி முறை கண்காணிப்பு:
வெளியூர் சென்றால் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பர். வீட்டின் பின்பக்க கதவுக்கும் பூட்டு அவசியம். அண்ணாநகர் பகுதியில் குற்றங்களை தடுக்க கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாவியை வீட்டில் வைக்காதீர்கள்:
நகைபறித்தால் சத்தமிடுங்கள். வெளியூர் சென்றால் எங்களுக்கும் பக்கத்து வீட்டாருக்கும் தகவல் சொல்லுங்கள். சாவியை வீட்டிலேயே வைக்காமல் நம்பிக்கைக் குரியவர்களிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள்.
மிளகாய் பொடி தேவை:
தனியாக செல்லும்போது கைவசம் மிளகாய்பொடி அவசியம். தயாராக வைத்துக்கொள்ளுங்கள். யாராவது நகைபறிக்க முயற்சிக்கும் நோக்கத்தில் வந்தால் அதை பயன்படுத்த வேண்டும்.
எச்சரிக்கையாக இருங்கள்:
பத்து ரூபாயை கீழே போட்டும் பிஸ்கட் போன்றவற்றை நம் மீது வீசியும் கவனத்தை திசைதிருப்பி பொருட்களை திருடுவர். அதேபோல் போலீஸ் என்றுக்கூறி உதவுவது போல் நடித்து நகை திருடுவர். அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications