அம்மா அணிக்கா? பாஜகவுக்கு போறீங்களா?... மாஃபா பாண்டியராஜனை கிறங்கடித்த கேள்வி!
அணி மாறப்போவதாக வெளியாகும் வதந்திகள் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு தாவப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எல்லாம் வதந்தி என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
முறையான மரியாதை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிக்கு முதலில் வந்த சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அண்மையில் அதிமுக அம்மா அணிக்கு தாவினார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கான பலம் குறைந்ததை அறிந்து, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அம்மா அணிக்கே திரும்புவார்கள் என்று எடப்பாடி தரப்பு கொக்கரித்து வந்தது.

அதிமுக அம்மா அணி பேச்சாளரும் தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத்தும், ஓ.பன்னீர்செல்வம் தனி மரமாவார் என்று கூறியிருந்தார். மேலும் நிச்சயம் ஓரிரு நாளில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் அம்மா அணிக்கே மீண்டும் வந்துவிடுவார் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாஃபா பாண்டியராஜன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அம்மாவின் வழியில் உண்மையாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்துடனே நான் தொடர்ந்து பணியாற்றுவேன். அணி தாவப் போவதாக வெளியாகும் வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் மாஃபா பாண்டியராஜனை கிண்டல் செய்யும் வகையில் நெட்டிசன் ஒருவர் அம்மா நீங்க அம்மா அதிமுக போரதா சொன்னாங்க ?? பொய்யா அது .. பாஜக விற்கு போறீங்களா ?? என்று கேட்டுள்ளார். இதற்கும் பதிலளித்துள்ள மாஃபா பாண்டியராஜன் அது உண்மையல்ல என்று கூறியுள்ளார்.
மாஃபா என்னும் எச் ஆர் கன்சல்டன்சி நடத்தி வந்த மாஃபா பாண்டியராஜன், முதன்முதலில் தேமுதிகவில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதனைத் தொடர்ந்து தேமுதிகவில் மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து அதிமுகவில் இணைந்து ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது புள்ளி விபர பேச்சினை கேட்ட ஜெயலலிதா, பள்ளிகல்வித்துறை அமைச்சராக நியமித்தார்.
நீங்க அம்மா அதிமுக போரதா சொன்னாங்க ?? பொய்யா அது .. பாஜக விற்கு போரிங்களா ??
— Swathi S (@SwathiKovai) July 29, 2017
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் திடீரென ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறியதால் அமைச்சர் பதவி பறி போனது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் மாஃபா பாண்டியராஜன்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications