புகை மண்டலமான தென்காசி.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. சிதறிய கட்டிடங்கள்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆலையில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் மைப்பாறை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பட்டாசு ஆலையில் வழக்கம்போல பணிகள் நடந்து வந்தது. 40 முதல் 50 ஊழியர்கள் இன்று இந்த பட்டாசு ஆலையில் பணிபுரிந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதிய நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், ஆலையில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
நல்ல வேளையாக பட்டாசு ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் சாப்பிட சென்றிருந்தபோது இந்த விபத்து அரங்கேறியுள்ளது. விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் உடனடியாக விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
ஆனால் தீ விபத்தால் எழுந்த கரும்புகை காரணமாக தீயணைப்பு வீரர்களால் பட்டாசு ஆலைக்குள் செல்ல முடியவில்லை. எனினும் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டும் உள்ளே சென்றுள்ளது. இதேபோல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ பரவி அருகில் உள்ள வயல்களுக்கும் பரவியது. இதில், சுமார் 44 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிர்களில் தீ பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்தது. இதனால் தீ விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கே கூடினர். போலீசார் அவர்களை கிட்டே வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதேபோல் ஊழியர்கள் யாரும் உள்ளே சிக்கியிருந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 5 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். கரும்புகை அதிகமாக இருப்பதாலும், தீ மேலும் பரவி வருவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications