மதிமுகவை தாக்கிய மல்லை சத்யா பூகம்பம்! துரை வைகோவுக்கு எதிராக கலகம்-ஸ்டாலினிடம் கெஞ்சிய வைகோ!
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) முதன்மைச் செயலாளரான துரை வைகோ (பொதுச்செயலாளர் வைகோவின் மகன்) மீது அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த அதிருப்தியின் உச்சமாக மல்லை சத்யாவை துரை வைகோ ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் மிக மோசமாக இழிவுபடுத்தியும் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் கருணாநிதியின் வாரிசு மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் மதிமுக என்ற கட்சியே உருவானது. ஆனால் மதிமுகவிலும் அதன் பொதுச்செயலாளர் வைகோவின் மகன், துரை வைகோ கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட நாள் முதலே கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. துரை வைகோவை கட்சிக்குள் சேர்க்கவே கூடாது என மதிமுக சீனியர்கள் திருப்பூர் துரைசாமி, மறைந்த கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்துப் பார்த்தனர். இந்த விவகாரத்தில்தான் கணேசமூர்த்தி தற்கொலையே செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

ஜாதிய கட்சியாகிறதா மதிமுக?
ஆனாலும் துரை வைகோ எம்பியாக்கப்பட்டு அவருக்கான ஆதரவும் மதிமுகவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதரவு என்பது அனைத்தும் 'ஜாதிய' அடிப்படையிலானதாக இருக்கிறது என்பதுதான் அதிருப்தியாளர்களின் குற்றச்சாட்டு. அத்துடன் மதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கும் ஜாதிய பாசத்தாலேயே நிர்வாகிகள் நியமிக்கப்படுவதால் அந்த கட்சியே ஒரு ஜாதிக்கு சொந்தமான கட்சியாக உருமாறிவிட்டதே என்கிற கோபம், கட்சியை அரும்பாடுபட்டு வளர்த்த சீனியர்களிடம் இருந்து வருகிறது.
துரை வைகோ மீது புகார்
இதன் வெளிப்பாடுதான் சென்னையில் நேற்று நடைபெற்ற மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுக்குழுவில் ஏற்பட்ட பகிரங்க மோதல். மதிமுகவில் அனைத்து பிரிவுகளிலும் ஜாதி பார்த்தே நியமனம் நடக்கிறது என பகிரங்கமாக துரை வைகோவை நேற்று பொதுக்குழுவில் விமர்சித்து பேசினர். இதனால் துரை வைகோ கோபத்துடன் வெளியேறினார்.
மல்லை சத்யா மீது தாக்குதல்
அதற்கு முன்னதாகவே, மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரான மல்லை சத்யாவை காலி செய்வதற்காகவே, துரை வைகோவின் ஆதரவு வட்டம், சமூக வலைதளங்களில் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. இந்த விமர்சனங்களை மல்லை சத்யாவால் ஏற்கவும் முடியவில்லை; கடந்து செல்லவும் முடியவில்லையாம்.
ஸ்டாலினிடம் கெஞ்சிய வைகோ
பொதுவாக மதிமுகவில் இருந்து விலகிச் செல்கிறவர்கள், திமுக பக்கம் நோக்கித்தான் நகருவது வழக்கம். துரை வைகோவுக்கு எதிரானவர்கள் திமுக பக்கம் சாரை சாரையாக படையெடுத்ததால் பதறிப் போன வைகோ, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். மதிமுகவில் இருந்து வர விரும்புகிறவர்களை ஒரு போதும் திமுகவில் சேர்த்துவிட வேண்டாம் எனவும் நா தழுக்க வைகோ கேட்டுக் கொண்டாராம்.
திமுக தலைமையின் கனத்த மவுனம்
மல்லை சத்யா போன்றவர்கள் தங்களது லாபி மூலம், திமுகவுக்கு தாவுவதற்கான ஏற்பாடுகளை செய்த நிலையிலும் வைகோவின் இந்த முட்டுக்கட்டையால் திமுக தலைமை மிகவும் தயங்குகிறதாம். ஏனெனில் வைகோவின் கடந்த கால வரலாறு அப்படி. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு திடீரென கூட்டணியை விட்டு வெளியேறுவார் வைகோ; அதற்கு இடம் தந்துவிடவே கூடாது என்பதால் வைகோ விவகாரத்திலும் மதிமுகவில் இருந்து தாவுவோர் விவகாரத்திலும் கனத்த மவுனத்துடன் இருக்கிறதாம் திமுக தலைமை.
சமூக வலைதளங்களில் கடும் தாக்குதல்
இதனையும் தங்களுக்கு சாதகமாக நினைக்கும் துரை வைகோ தரப்பு, யார் எதிர்க்கிறார்களோ, அவர்களாகவே ஒதுங்கிப் போகும் அளவுக்கு இறங்கி அடித்துவிடலாம் என சமூக வலைதளங்களை ஆயுதமாக்கி தாக்குதல் தொடுக்கிறதாம். இதுதான் மல்லை சத்யாவுக்கு எதிரான சமூக வலைதள தாக்குதல்களின் பின்னணி என்கின்றன மதிமுக வட்டாரங்கள்.
திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம்
இதனிடையே திருச்சி மாவட்ட மதிமுக, மல்லை சத்யாவுக்கு எதிராக ஒரு தீர்மானம் இன்று நிறைவேற்றி உள்ளது. அதில், மல்லை சத்யாவை, மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல வேறு சில மாவட்டங்களிலும் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதாம்.
அடுத்து என்ன நடக்கும்?
தற்போதைய நிலையில் மதிமுகவை மல்லை சத்யா என்ற பூகம்பம் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த பூகம்பத்தை துரை வைகோ தரப்பு எப்படி எதிர்கொள்ளும்? வைகோவின் பரிதாப வேண்டுகோளை தொடர்ந்து காப்பாற்றுமா திமுக தலைமை? என்பது எல்லாம் வரும் நாட்களில் தெரிந்துவிடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பகிரப்படும் வைகோ பேச்சு
சென்னையில் நேற்று மல்லை சத்யா குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நெகிழ்ச்சியுடன் பேசிய பேச்சுகளை அவரது ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications