டாஸ்மாக்கில் போலி மதுபானம்.. நெல்லையில் ஒருவர் சாவு, சேர்ந்து குடித்த நண்பர் உயிர் ஊசல்!
நெல்லை: டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்ட, போலி மதுகுடித்து ஒருவர் பலியாகி இன்னொருவர் உயிர் ஊசலாடும் சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
திருநெல்வேலி, அருகேயுள்ள முக்கூடலில் உள்ள டாஸ்மாக்கில், நேற்று இரவு மது வாங்கி குடித்த, அரியநாயகிபுரத்தை சேர்ந்த பரமசிவன் என்பவர் மகன் சண்முகம் (40), ஊருக்கு ஒதுக்குப்புறமாக இறந்துகிடந்தார்.

அவருடன் சேர்ந்து, மதுக்குடித்த ராமகிருஷ்ணன் (50) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலி மதுபானம் குடித்ததால் இருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனவே, போலீசார் விசாரணை நடத்தி, இன்று காலையில் பள்ளக்கால்பொதுக்குடியை சேர்ந்த கோபால் (81), என்பவரை போலி மதுபானம் விற்றதாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 99 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் போலியான மதுபானங்களை சப்ளை தொடர்ந்து நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் பெயர்களில், அதே பாட்டில்களில் ஸ்பிரிட் அளவு அதிகமாக கலந்து போலி மதுபானம் சப்ளை செய்யப்படுகிறது. அண்மையில் புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் இருந்து ஒரு வேன் நிறைய பாட்டில்களை சப்ளை செய்த கும்பலை போலீசார் கைதுசெய்தனர். பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications