மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகிளா கோர்ட்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ரெஜினா. கூலித் தொழிலாளியான இவர் சொந்தமாக வியாபாரம் செய்யவேண்டும் எனவும், அதற்கு முன்பணம் தேவைப்படுகிறது எனக்கூறி மனைவி ரெஜினா உறுப்பினராக உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் மூலம் கடன் வாங்கி தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், ரெஜினா ஏழுமலைக்கு கடன் வாங்கி கொடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த ஏழுமலை, வீட்டிலிருந்த ஐந்து பவுன் நகையை எடுத்துக்கொண்டு போய் அடகு வைத்தார். இதன் காரணமாக, இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரெஜினா, கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போச்சம்பள்ளி போலீஸார் ரெஜினாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஏழுமலையை கைது செய்து அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய ஏழுமலைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications