நாவரசு பாணியில் சம்பவம்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட தலையில்லாத ஆண் சடலம்... சென்னையில் பரபரப்பு
துண்டு துண்டாக வெட்டப்பட்ட தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் முகப்பேர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை முகப்பேரில் கொலை செய்யப்பட்ட ஆண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலையில்லாத காரணத்தினால் சடலத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முகப்பேர் மேற்கு பகுதி வழியாக செல்லும் மழைநீர் கால்வாயில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற துப்புறவு பணியாளர்கள், அங்கு கிடந்த கோணிப்பையை இழுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போட முயன்றுள்ளனர்.
அப்போது கோணிப்பையில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து விழுந்த போது, பையிலிருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் உடல் பாகங்கள் கீழே விழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த துப்புரவு பணியாளர்கள், உடனடியாக காவல்துறையினர் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் பாகங்களில் தலை இல்லாத காரணத்தினால் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோணிப்பைக்குள் உடல் வெட்டப்பட்டு கிடந்த சம்பவம் முகப்பேரு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மகன் அண்ணாமலை பல்கலை மாணவர் நாவரசு ராக்கிங்கால் இப்படித்தான் கொல்லப்பட்டார். அது தமிழகத்தையே உலுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications