நாளிதழ்களில் இன்று: தமிழக சட்டமன்ற உறுப்பினரை தாக்கிய தொழிலாளி பலி
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா - எம்.எல்.ஏ-வை தாக்கியவர் பலி
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வத்தை தர குறைவாக பேசி, தாக்கியதாக கூறப்படும் ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளதாக செய்தி பிரசுரித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் ."கலசப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி. ஆர் பிறந்த நாள் விழாவுக்கான, மேடை அலங்கார பணிகளை வசந்தமணி என்பவர் செய்துள்ளார். இந்தப் பணிக்கான கூலி தொகையை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தர வேண்டி இருந்துள்ளது. இதை கேட்டபோது, எம்.எல்.ஏ, 5000 ரூபாயை அளித்துவிட்டு, வசந்தமணியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த வசந்தமணி, ஜனவரி 22 ஆம் தேதி, குடிபோதையில் எம்.எல்.ஏ வீட்டிற்கு சென்று, எம்.எல்.ஏவின் கார் ஜன்னலை உடைத்து, பின் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின், எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் வசந்தமணியை தாக்கி போலீஸூல் ஒப்படைத்தனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை அதிகாலை இறந்துள்ளார்." என்கிறது அந்தச் செய்தி
தினமணி - தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது
தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி. "கர்நாடகத்தின் தண்ணீர் தேவையை நிறைவு செய்ய போதிய தண்ணீர் இருப்பு அணைகளில் இல்லை. இந்த நிலையில், காவிரி நீருக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் பெங்களூர் வந்தால், அவர்களை மனதார வரவேற்று கர்நாடகத்தின் நிலையைத் தெளிவாக எடுத்துரைத்து அனுப்பிவைப்போம்." என்று அமைச்சர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.
தி இந்து (தமிழ்)
தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதை அடிப்படையாக வைத்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தி இந்து தமிழ் நாளிதழ்.
தினத்தந்தி - 'பேருந்து ஊழியர்களின் 7 நாள் சம்பளம் பிடித்தம்’
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஊழியர்கள் 7 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி. "போக்குவரத்து ஊழியர்களுக்கு நேற்று அவர்களது வங்கி கணக்கில் ஜனவரி மாதத்தின் சம்பளத் தொகை செலுத்தப்பட்டது. இந்த தொகையை எடுக்கச் சென்றபோது, வங்கி கணக்கில் வழக்கமான சம்பளத்தைவிடவும் குறைவாக இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்" என்று விவரிக்கிறது அந்தச் செய்தி.
தி இந்து (ஆங்கிலம்) - எதிர்பார்ப்பு
இன்று தாக்கல் செய்யபட இருக்கும் மத்திய பட்ஜெட்டில் எய்ம்ஸ் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது பகுதியை தமிழகம் எதிர்பார்ப்பதாக கூறுகிறது தி இந்து ஆங்கில நாளிதழ். கடந்த ஆண்டு தமிழகத்திற்கென பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததால் தமிழகம் ஏமாற்றம் அடைந்தது என்கிறது அந்தச் செய்தி.
பிற செய்திகள்:
- ராஜபக்ச ஆட்சிக்கால ஊழல் வழக்குக்கு சிறப்பு நீதிமன்றம்
- LIVE - சிவப்பு நிறத்தில் மாறிவரும் நிலா- நாசாவின் நேரலை காட்சிகள்
- கிரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்கு தடை விதித்தது ஃபேஸ்புக்
- ஒரே நாடு ஒரே தேர்தல்’ - ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் வெளிப்பாடா?
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!















Click it and Unblock the Notifications