இந்தியாவிலேயே மிகவும் எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார்தான்.. மீண்டும் சொத்து விவரம் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலேயே மிகவும் எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார்தான் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இவரின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய மாநில முதல்வர்களில் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் யாருக்கு குறைவான சொத்து இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

Manik Sarkaar tops the list in poorest CM in India

இதில் இந்தியாவிலேயே மிகவும் எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார்தான் என்று கூறப்பட்டுள்ளது. இவர் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து இந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை (மார்க்சிஸ்ட்) சேர்ந்த இவர் 1998 முதல் கடந்த 15 வருடங்களாக திரிபுராவின் முதல்வராக இருக்கிறார். நீண்ட காலமாக முதல்வராக இருந்து வரும் இந்திய மாநில முதல்வர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர்.

59 வயதான மாணிக் சர்க்காருக்கு‍ முதல்வருக்கு வழங்கப்படும் சம்பளம் மட்டும் கொடுக்கப்படுகிறது. மாத ஊதியமாக 9,200 ரூபாயும் அலவன்சாக 1,200 ரூபாயும் கொடுக்கப்படுகிறது.

அந்த சம்பளத்தையும் அவர் கட்சி வளர்ச்சிக்கு தந்து‍விடுகிறார். கட்சி தரும் 5,000 ரூபாயில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இவருக்கென்று‍ தனியாக சொந்தமாக வீடோ, நிலமோ, நகையோ கிடையாது. இதன் காரணமாகவே இவர் பல ஆண்டுகளாக அந்த முக்கிய இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Andhara CM Chandrababu Naidu top the list in richest CM in India. He leads the table with 177 crore assets. Thiripura CM Manik Sarkar is the poorest CM in India. Mamata and Mehaboopa lists next to Manik Sarkar.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற