For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. ஜெயிலுக்கு போவார்... காவிரிக்காக சோனியாவைத்தான் பார்க்கனும்: சேலத்தில் விஜயகாந்த் 'பொளேர்'

By Mathi
Google Oneindia Tamil News

சேலம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த மேல்முறையீடு செய்துள்ள ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு இருக்காது.. அவர் சிறைக்கு சென்றுவிடுவார் என்றும் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத்தான் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சேலத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க.வின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:

‘Many AIADMK ministers would soon be lodged in prison’

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 10 நாட்களில் தீர்ப்பு வந்துவிடும்.. அவர் சிறைக்குப் போவது உறுதி.. தற்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறைக்குப் போயுள்ளார்.

இதேபோல் அண்ணா தி.மு.க. அமைச்சர்களும் அடுத்தடுத்து சிறைக்குப் போய்விடுவார்கள்.. கர்நாடகாவில் இப்போது இருப்பது காங்கிரஸ் ஆட்சி... அங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலங்களில்தான் காவிரி பிரச்சனை குறித்து பேசி தீர்வு காண முடிந்திருக்கிறது.. பாரதிய ஜனதா கட்சியால் எதுவும் செய்ய முடியாது. நாம் நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பார்க்க வேண்டும். அவரை சந்திக்க ஒரு குழுவை நானே அழைத்துச் செல்கிறேன்.

அந்த கட்சியின் முக்கிய தலைவர்களுடன் பேசுவோம்.. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் சோனியாதான் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி தர முடியும். எம்.ஜி.ஆர் .ஆட்சிக் காலத்தில் அப்படித்தான் நடந்தது.

நாம் இப்படி சொன்ன பிறகும் சோனியா காந்தி நம்மை சந்திக்க மறுத்தால் அவர் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டமும் நடத்துவோம்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

English summary
Making a rare public appearance, DMDK leader Vijayakanth took a dig at AIADMK chief J Jayalalithaa, saying she would suffer a setback in her appeal in the disproportionate assets case in the Karnataka high court, verdict for which was expected soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X