மரக்காணம் கலவரம்: நீதி விசாரணை கோரிய வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்
மரக்காணம் கலவரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரி பாமக தலைவர் ஜி.கே.மணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
கடந்த 2013 ஏப்ரல் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பாக சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க வந்த பாமகவினர் மீது மரக்காணம் அருகில் கட்டையன் தெருவில் தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

இதைக் கண்டித்து விழுப்புரத்தில் பாமகவினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மரக்காணம் கலவரம், அதன் தொடர்ச்சியான கைது குறித்து உண்மைகளை அறியும் வகையில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தக் கோரியும், பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் பாமக தலைவர் ஜி.கே.மணி கடந்த 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதியைக் கொண்ட முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''நீதி விசாரணை தொடர்பான கோரிக்கையை தற்போது வலியுறுத்தவில்லை. ஆனால், கலவரத்தை தடுக்கத் தவறிய போலீஸார், அதன்பிறகு நடந்த கைது நடவடிக்கைகளில் மட்டும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். கைது நடவடிக்கைகளின்போது பின்பற்ற வேண்டிய எந்த விதிமுறைகளையும் முறையாக பின்பற்றவில்லை'' என வாதிட்டார்.
அதையடுத்து மனு மீதான விசாரணையை முடித்து வைப்பதாக கூறிய நீதிபதிகள், ''கைது நடவடிக்கைகளின்போது தேசிய மனித உரிமை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை போலீஸார் முறையாக பின்பற்ற உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்'' என டிஜிபிக்கு உத்தரவிட்டனர். பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் போலீஸார் தலையிட வேண்டிய அவசியமே இருக்காது. அதுபோல அரசியல் கட்சிகளுக்கும் சமூக பொறுப்புணர்வு உள்ளது. எல்லோரும் அதை உணர்ந்து செயல்பட்டு இருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது எனவும் உத்தரவில் குறிப்பிட்டனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications