மீண்டும் திரண்ட இளைஞர்கள்.. மெரீனாவில் தொடரும் மாணவர்கள் போராட்டம்
சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து தடியடி நடத்தி விரட்டப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீண்டும் திரண்டு வருகின்றனர்.
சென்னை: தமிழக அரசு, காவல்துறையின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி வருகிறது சென்னை மெரீனா போராட்டம். சிதறி ஓடிய மாணவர்கள் மீண்டும் திரும்பி பெரும் கூட்டமாக கூடி வருகின்றனர். இதனால் மீண்டும் மெரீனா கடற்கறையில் இளைஞர்கள் கூட்டம் ஆக்கிரமித்து விட்டது. தடியடியை தவிடு பொடியாக்கி விட்டனர் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும்.
கிட்டத்தட்ட மெரீனாவை மீண்டும் தங்களது கட்டுக்குள் மாணவர்கள் கொண்டு வந்து விட்டனர். போலீஸார் தடுக்கவோ, தடியடி நடத்தவோ முயலாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக அங்குமிங்கும் போய்க் கொண்டுள்ளனர். முன்பு காமராஜர் சாலையையொட்டி நிறைந்திருந்த இளைஞர் படை தற்போது கடலுக்கு வெகு அருகில் நிலை கொண்டுள்ளது.

சிதறி ஓடிய அத்தனை பேரும் மீண்டும் திரும்பி வருகிறார்கள். இதனால் மீண்டும் மெரீனாவில் இளைஞர் படை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. முன்பு இருந்த பதட்டம் சற்று குறைந்து இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் கடற்கரை பரப்பை நிறைத்து அமர்ந்து வருகின்றனர்.
என்னதான் அடித்தாலும், துரத்தினாலும் எங்களது போராட்டம் ஓயாது.. இதுதான் மக்கள் சக்தி.. இதுதான் இளைஞர் சக்தி.. இதுதான் மாணவர் சக்தி.. இதை கலைக்க முனையாதீர்கள் என்பதை காவல்துறைக்கு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது மெரீனா எழுச்சி.
மெரினாவில் மீண்டும் போராட்டத்தில் மாணவர்கள் #Jallikattu #JallikattuProtests! 😎😎💪💪💪#ஜல்லிக்கட்டுக்காக #ஜல்லிகட்டுபோராட்டம் #ஜல்லிகட்டு pic.twitter.com/wWU4g0YQw1
— rσх ѕtαr (@roxstarrk2u) January 23, 2017
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications