அஞ்சலாட்சியை சந்திக்க இடையூறாக இருந்த மண்ணாங்கட்டி.. தலையில் அடித்து கொலை செய்த முருகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனது கள்ளக்காதலியைச் சந்தித்துப் பேசி சந்தோஷமாக இருப்பதற்கு அவரது கணவர் பெரும் இடையூறாக இருப்பதாக கருதிய வாலிபர், தனது கள்ளக்காதலியின் கணவரை தலையில் அடித்துக் கொடூரமாக கொலை செய்து தற்போது கைதாகியுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள நரையூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (51), கொத்தனார். இவரது மனைவி அஞ்சலாட்சி (31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

Mason murdered by his wife's paramour

திருமணத்துக்கு பிறகு அஞ்சலாட்சியின் சொந்த ஊரான செஞ்சியை அடுத்த ஆதனூரில் கணவனும், மனைவியும் வசித்து வந்தனர். மண்ணாங்கட்டி தினசரி குடிப்பார். குடித்து விட்டுத்தான் வீடு திரும்புவார். கடந்த 27ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அடுத்த நாள் அதே பகுதியில் பிணமாக சாலையில் கிடந்தார் மண்ணாங்கட்டி.

விரைந்து வநத் போலீஸார் மண்ணாங்கட்டி உடலை மட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணை நடத்தி வந்தனர். முதலில் கீழே விழுந்து அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். ஆனால் பிரதேப் பரிசோதனையில் கொலை என்று தெரிய வந்தது. இதையடுத்து ஆதனூரில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அப்போதுதான் அஞ்சலாட்சியின் கள்ளக்காதல் கதை தெரிய வந்தது. அவருக்கும் முருகன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. ஆனால் அடிக்கடி தனிமையில் சந்திக்க முடியாத அளவுக்கு மண்ணாங்கட்டி நடுவில் இருந்திருக்கிறார். இதனால் இருவரும் தவித்துள்ளனர். இதையடுத்து மண்ணாங்கட்டியை காலி செய்து விட்டால் நமக்கு பிரச்சின இல்லை என்ற முடிவு செய்த முருகன், அடித்துக் கொலை செய்து விட்டார்.

இதுகுறித்து முருகன் கூறுகையில், அஞ்சலாட்சியை நான் சந்திக்க மண்ணாங்கட்டி இடையூறாக இருந்தார். எனவே அவரை தீர்த்து கட்டினால்தான் நிம்மதி என நினைத்தேன். அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். கடந்த 27 ம்தேதி இரவில் மண்ணாங்கட்டி மட்டும் குடிபோதையில் தனியாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அதனை கண்ட நான் அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றேன். இருளான பகுதியில் அவர் சென்றபோது அவரது தலையின் பின்புறத்தில் கையால் பலமாக தாக்கினேன். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். எனினும் அவரை சரமாரியாக அடித்து உதைத்து கொலை செய்தேன். அவர் இறந்தது ஊர்ஜிதமானவுடன் தப்பி சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Mason was murdered by his wife's paramour near Villupuram.
Please Wait while comments are loading...