மசாஜ் சென்டர் மேரி.. 24 வயசுதான்.. ரூமுக்குள் செய்த ஷாக் காரியம்.. கதிகலங்கிய கள்ளக்குறிச்சி
மசாஜ் சென்டரில் வேலை பார்த்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்
கள்ளக்குறிச்சி: மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்த மேரிக்கு என்னாச்சு என்றே தெரியவில்லை.. திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி.. 24 வயசுதான் ஆகிறது.. இவர் அப்பா பெயர் அந்தோணிசாமி.. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொடைக்கானலில் மசாஜ் சென்டருக்கு வேலைக்கு வந்தார்.

அந்த சென்டரில்தான் சுபிஷ் என்ற இளைஞரை சந்தித்தார்.. சுபிஷூக்கு 28 வயதாகிறது.. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.. அதனால், 2 பேரும் கல்யாணமே செய்து கொள்ளாமல், ஒரே ரூமில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடந்தது.. அதில், மேரி வேலை பார்த்த மசாஜ் சென்டரும் ஒன்று.
இறுதியில், அந்த மசாஜ் சென்டரை மூடிவிட்டனர். இதனால் கையில் காசின்றி காதலர்கள் 2 பேருமே தவித்துள்ளனர்.. குடும்பமும் நடத்த முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் மேரி தன்னுடைய ரூமுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்... இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.. தகவலறிந்து கொடைக்கானல் போலீசார் விரைந்து வந்தனர்.
மேரியின் சடலத்தை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான், அந்த ரூமில் 2 பேரும் தண்ணி அடித்திருந்ததற்கான அடையாளம் இருந்தது... பிறகு சுபிஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் சொல்லும்போது, "எங்களுக்கு வேலை இல்லை.. வருமானமும் இல்லை.. அதனாலேயே கல்யாணத்தைகூட செய்து கொள்ள முடியவில்லை.
தினம் தினம் பண பிரச்சனை இருக்கவும், எங்களுக்குள்ள நிறைய சண்டைகள் வந்து போகும்.. வேலை கிடைத்ததும் கல்யாணம் செய்யலாம்னு முடிவு செய்திருந்தோம்... சொந்த ஊருக்கு போறதுக்கு கூட மேரி கிட்ட பணம் இல்லை.. அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என்று வாக்குமூலத்தில் கூறினார்.
ஊருக்கு போறதுக்கு பணம் இல்லையென்றால், ஒன்றாக சேர்ந்து தண்ணி மட்டும் எப்படி அடித்தார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது? அத்துடன் மேரி தற்கொலையில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications