பன்றிக் காய்ச்சலைப் பரப்பும் மாயனூர் வாரச் சந்தை...!
கரூர்: சமூக விரோதிகளின் கூடாரமாகவும், பன்றிக்காய்ச்சல் உருவாகும் மையமாகவும் விளங்குகிறது கரூர் மாவட்டம் மாயனூர் வாரச் சந்தை.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள மாயனூர் பகுதியில் வாரா வாரம் திங்கள் அன்று வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே 18 பட்டி கிராம மக்கள் பயன் பெறும் வகையில் திங்களன்று வாரம், வாரம் நடைபெறும் சந்தையில் காய்கறிகள், கிழங்கு, மளிகை பொருட்கள், கீரை வகைகள், கருவாடு உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் விற்பனையாகும்.

இச்சந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இருபுறமும், கம்பி கேட், சந்தையை சுற்றிலும் மதில் சுவர் எழுப்பபட்டு மிகவும் பாதுகாப்புடனும், சுகாதாரத்துடனும் காணப்பட்டது. ஆனால் தற்போது வார சந்தையில் ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மிகப்பெரிய கழிப்பிடத்தை கட்டி வைத்ததோடு, அதை பயன்படுத்தாமல் பூட்டி கிடப்பது ஒரு புறம் இருக்க, இந்த வார சந்தையில் சுற்றுச்சுவர் பல பகுதியில் முழுவதும். பொதுமக்கள் ஆக்கிரமிப்போடு காணப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் சுற்றித்திரியும் பன்றிகளின் வளர்ப்பிடமாகவும், நாடோடிகள், பிச்சைக்காரர்கள், சமூக விரோதிகள், தங்குமிடமாகவும் தற்போது காணப்படுகிறது. அகன்ற இடத்தில் இருந்த வாரச் சந்தை தற்போது குறுகி சாலை சந்தை போல் காட்சியளிகிறது.
ஆனால் தற்போது வாரச் சந்தை போல இல்லாமல் பன்றிக்காய்ச்சல் பரவும் சந்தையாக, டெங்கு காய்ச்சலை உருவாக்குமிடமாக, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது.

தமிழகத்திலேயே மைய பகுதியில் இருப்பதால்தான் இந்த ஊருக்கு மையனூர் என்ற பெயர் வந்தது. பின்னர் அது காலப் போக்கில் மாயனூர் என்றானது என்பது வரலாறாகும். இப்படி பட்ட தமிழகத்தின் மைய பகுதியே சுகாதார துறை சீர்கேட்டிலும், சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குவது குறித்து அரசு நிர்வாகம் கவனம் கொண்டால் நல்லது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications