மயிலாடுதுறை நகைக்கடையில் ரூ.2 கோடி தங்க கட்டிகள்.. ஓவர் நைட்டில் கிலோ கணக்கில் மைனர் தந்த ஆச்சரியம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஒன்றரை கிலோ தங்க கட்டிகளை தூக்கி கொண்டு ஓடிய சிறுவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் நகைக்கடை ஓனர்.. இதையடுத்து ஓவர் நைட்டில் நடந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தையே பரபரப்பாக்கி விட்டது.. என்ன நடந்தது?
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டு அருகே உள்ளது டவுன் எக்ஸ்டன்சன் தெரு... இங்கு செயல்பட்டு வலுரம் நஜீம் காம்ப்ளக்ஸ் என்ற தனியார் வணிக வளாகத்தில், "ஸ்ரீ கிருஷ்ணா தங்கம் பரிசோதனை மற்றும் சுத்திகரிப்பு நிலையம்" செயல்பட்டு வருகிறது.

17 வயது சிறுவன்
இந்த நிறுவனத்தை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுஹாஷ் (45) என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு நகைக்கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் தூள் தங்க நகைகள் மற்றும் பழைய நகைகள் உருக்கப்பட்டு, சுத்தமான தங்கக் கட்டிகளாக மாற்றிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓம்கார் என்ற 17 வயது சிறுவன் கடந்த வாரம் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளான்... சம்பவத்தன்று கடையில் சுஹாஷ் மற்றும் ஓம்கார் ஆகிய இருவரும் மட்டுமே இருந்துள்ளனர்.
மயிலாடுதுறை நகைக்கடை ஓனர்
வழக்கம் போல் பல்வேறு நகைக்கடைகளில் இருந்து உருக்குவதற்காக கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டு, ஒன்றரை கிலோ எடையுள்ள தங்கக் கட்டியாக மாற்றப்பட்டுள்ளது.
இரவு சுமார் 8.30 மணியளவில், உருக்கப்பட்ட தங்கக் கட்டியை எடை போட்டு எடுத்து வருமாறு சுஹாஷ், சிறுவன் ஓம்காரிடம் கொடுத்துள்ளார். அதனை எடுத்துக் கொண்டு கடையின் முன்பகுதிக்கு வந்த ஓம்கார், திடீரென சபலப்பட்டு ரூ.2 கோடி மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கக் கட்டியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்...
1.5 கிலோ தங்கம் கட்டி
இதைப்பார்த்து சுஹாஷ் அதிர்ச்சியடைந்து, கூச்சலிட்டார்.. சிறுவனை பின்னாடியே விரட்டிக் கொண்டு போனார்.. ஆனால் சிறுவன் மின்னல் வேகத்தில் தப்பித்து தலைமறைவாகி விட்டான்... இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சுஹாஷ் மயிலாடுதுறை போலீசில் புகார் தந்தார்...
இந்த புகாரின் அடிப்படையில் தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்தார்... தப்பியோடிய சிறுவன் ஓம்காரை கைது செய்ய தனிப்படையும் அமைத்து தீவிர தேடுதல் பணிக்கு உத்தரவிட்டார்..
ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள்
ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் 17 வயது சிறுவன் தலைமறைவான இந்த சம்பவம், மயிலாடுதுறை வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது..
இந்நிலையில், மயிலாடுதுறையில் ஒன்றரை கிலோ தங்கத்துடன் தப்பிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்... தப்பியோடிய சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. ஓவர்நைட்டில் நடந்த சம்பவத்தின் அதிர்வலைகள் மயிலாடுதுறையில் இருந்து இன்னமும் நீங்கவில்லை..
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications