டிமிக்கி கொடுக்கும் சிறுத்தை.. மயிலாடுதுறையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை.. இதோ லிஸ்ட்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை சாலைகளில் உலாவியது.

இந்த சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக செம்மங்குளம் பகுதியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர்ந்து சிறுத்தையை தேடி வருகின்றனர். ஆனால் இன்னும் சிறுத்தை சிக்கவில்லை.
2 நாளாக சிக்காத சிறுத்தை! மைசூர் டூ மயிலாடுதுறைக்கு ரயிலில் வந்ததா? நடந்தது என்ன?
இதற்கிடையே தான் சிறுத்தை நடமாட்டம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் சிறுத்தை தென்பட்டால் 93608 89724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 3ம் தேதி செம்மங்குளம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாடும் பகுதிகளில் உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக தான் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் ஆரோக்கியநாதபுரத்தில் செயல்படும் மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுதவிர டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளிக்கும் சிறுத்தை நடமாட்டத்தால் இன்று விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications