Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது! அந்த 2 உயரதிகாரிகள்தான் காரணம்! மயிலாடுதுறை டிஎஸ்பி பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஸ்டாலின் மீது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் உளவுப்பிரிவு ஐஜி செந்தில்வேல் ஆகியோர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

mayiladuthurai police tamil nadu

வாகனப் பிரச்சனையால் ஏற்பட்ட சர்ச்சை

மயிலாடுறை மதுவிலக்கு காவல் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ரோந்துப் பணிக்காக ஒதுக்கப்பட்ட வாகனத்தை எஸ்பி ஸ்டாலின், விஐபி பாதுகாப்பு பணிக்காக எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு பழுதடைந்த வாகனத்தை மாற்று ஏற்பாடாக வழங்கியதாகவும் சுந்தரேசன் குற்றம்சாட்டினார்.

அந்தப் பழுதடைந்த வாகனம் தனக்குத் தேவையில்லை என்று கூறி, டிஎஸ்பி சுந்தரேசன் தனது வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கு நடந்தே சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இருப்பினும், மயிலாடுதுறை காவல்துறை இந்த தகவலை மறுத்து, "டிஎஸ்பியின் வாகனம் திரும்பப் பெறப்பட்டதாகச் சொல்லப்படும் தகவலில் உண்மை இல்லை. கடந்த ஜூலை 11 ஆம் தேதி (2025) முக்கிய பணிக்காக அவரது வாகனம் பெறப்பட்டு மாற்று வாகனம் தரப்பட்டது. இன்று அவர் பயன்படுத்தி வந்த அதே வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்தது.

டிஎஸ்பி சுந்தரேசனின் அதிர்ச்சிப் பேட்டி

இந்நிலையில், மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பேட்டியில் கூறியதாவது:

"காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரியின் கொலை வழக்கில் எனது விசாரணை அறிக்கையை மாற்ற வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேல் ஆகியோர் தீவிரம் காட்டுகின்றனர். அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு எனக்கு மன உளைச்சலைக் கொடுக்கிறார்.

நேர்மையான காவல் அதிகாரியான எனக்கு நான்கு மாதங்களாகச் சம்பளமே வழங்கப்படவில்லை. இதனால் நான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் நான் ஓய்வூதியம் கூட பெறக் கூடாது என்பதற்காக சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கைகளில் எஸ்பி ஈடுபட்டுள்ளார். நான் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாசலிலேயே தற்கொலை செய்யத் தயார். எனக்கு என் உயிர் முக்கியமில்லை. ஆனால் எனது குடும்பத்திற்கு எனது உயிர் முக்கியம்.

வளைந்து செல்லாவிட்டால் ஒடுக்கப்படுவீர்கள் என்று ஆபாசமான விரல் சைகை காட்டி எஸ்பி மிரட்டுகிறார். நான் தற்போது தன்னிச்சையாகப் பேட்டி அளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன் என்பதைத் தெரிந்துதான் இந்தப் பேட்டியை அளிக்கிறேன். இங்கு போலீசாருக்கும் பாதுகாப்பில்லை, காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை. நேர்மையாக இருப்பது ஒரு குற்றமா? கள்ளச்சாராய வழக்கில் 700 பேரைக் கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டுள்ளேன். உயரதிகாரிகளின் கட்டளைப்படி திருப்புவனம் அஜித்குமாரை தாக்கிய போலீசாரின் குடும்பத்தினர் தற்போது அவதியடைந்து வருகிறார்கள்."

சுந்தரேசனின் கடந்தகால பணிகள்

தமிழக மனித உரிமை ஆணையத்தின் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சுந்தரேசன், ஓய்வு பெற்ற காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்ட்டர் ஆகியவற்றின் விசாரணை அதிகாரியாக இருந்துள்ளார். இவர் நடத்திய விசாரணையில் காவல்துறை தரப்பில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் இருந்து வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் கள்ளச்சாராயம் விற்பனை, மது கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதுபோல், மாவட்டத்தில் அனுமதியே இல்லாமல் செயல்பட்டு வந்த 23 டாஸ்மாக் பார்களுக்குச் சீல் வைத்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் மதுபானக் கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பி ஸ்டாலின் மறுத்துள்ள நிலையில் வேறு காவல் உயர் அதிகாரிகள் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+