மயிலாடுதுறையில் உறவினரின் 2 மனைவிகளுடனும் கள்ளக்காதல்.. இப்படியும் கூட நடக்குமா.. அதிர வைத்த கணவன்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மேல குத்தவக்கரையை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு 8 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. இவர் தனது உறவினர் ராஜாவை காண அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்படி சென்று வந்த போது, ராஜாவின் இரண்டு மனைவிகளுடன் லட்சுமணன் கள்ளக்காதலில் ஈடுபட்டாராம். இதனால் சென்னை ஆவடியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட லட்சுமணனுக்கு என்ன நடந்தது தெரியுமா? இந்த பதிவில் பார்ப்போம்.
கள்ளக்காதல் உண்மையில் சமூகத்தின் சாபக்கேடாக இருக்கிறது. திருமணத்தை மீறிய உறவு என்பது இந்தியாவில் சட்டவிரோதமாக இல்லை. சமூகத்தில் மிகப்பெரிய தவறு என்கிற போதிலும் தண்டனை என்பது கிடையாது. பிடிக்காவிட்டால் கள்ளக்காதலை காரணம் காட்டி விவாகரத்து வாங்கி செல்லலாமே ஒழிய, அதனை வைத்து சட்டப்பூர்வ தண்டனை பெற முடியாது.

நிவாரணம் பெற முடியாது
அதேபோல் கள்ளக்காதலில் ஈடுபடுவோர், அதனை வைத்து ஏமாற்றிவிட்டதாக சட்ட ரீதியாக எந்த நிவாரணமும் பெற முடியாது. அதாவது விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் நடந்ததாக இருவரில் ஒருவர் கூட புகார் அளிக்க முடியாது. ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் காதலில் ஈடுபட்டு ஏமாற்றம் அடைந்தால், சட்ட ரீதியாக நிவாரணம் பெறவே முடியாது. மயிலாடுதுறையில் கள்ளக்காதல் விவாகரத்தால் நடந்த சம்பவம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
அடிக்கடி சென்ற லட்சுமணன்
மயிலாடுதுறை மாவட்டம் மேல குத்தவக்கரையை சேர்ந்த 35 வயதாகும் லட்சுமணனுக்கு திருமணம் ஆகி அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதேபோல் கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கிற ராமச்சந்திரன் லட்சுமணனின் தந்தையின் வீட்டின் அருகே வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா, சத்யா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். ராஜாவும், லட்சுமணனும் உறவினர்கள் ஆவார். தனது தந்தையின் வீட்டிற்கு அருகே ராஜா வசித்து வந்ததால் லட்சுமணன் அங்கு அடிக்கடி சென்று வந்தாராம்.
கள்ளக்காதல்
அப்போது ராஜாவின் 2 மனைவிகளிடம் பழகி வந்தாராம் லட்சுமணன். ஒரு கட்டத்தில் இரண்டு மனைவிகளுடன் திருமணத்தை மீறிய கள்ளக்காதலில் ஈடுபட்டாராம். இதை அறிந்த ராஜா, லட்சுமணனிடம் தனது மனைவிகளுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை வெளியே சொல்லாமல் இருக்க அவரிடம் பணம் கேட்டு மிரட்டினாராம். பணம் தராவிட்டால் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து விடுவதாகவும் லட்சுமணனை, ராஜா மிரட்டினாராம். ஒரு கட்டத்தில் ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து லட்சுமணன், சென்னை ஆவடி பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வந்தாராம்.
சென்னையில் இருந்து கடத்தல்
இந்த நிலையில் கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்காலில் லட்சுமணனின் உடல் கிடந்துள்ளது. இதுகுறித்து ஆணைக்காரன் சத்திரம் போலீசார், விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது.. இதன்படி ராஜா மற்றும் அவரது நண்பர் வல்லம்படுகையை சேர்ந்த ராகுல் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் லட்சுமணன் சென்னை ஆவடியில் இருப்பதை தெரிந்து அங்கு சென்றுள்ளது. இங்கிருந்து லட்சுமணனை கொள்ளிடத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரை தீர்த்துக்கட்டி, உடலை அருகில் உள்ள தெற்குராஜன் வாய்க்காலில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆணைக்காரன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜா மற்றும் அவரது நண்பர் ராகுல் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications