கொல்லை பக்கமாக வந்து கொழுந்தனார் செய்த வேலை.. எஸ்பியின் காலியில் விழுந்த கதறிய கணவனை இழந்த பெண்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில கணவனை இழந்த பெண்ணுக்கு மாமனார் வீட்டில் கணவனின் தம்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இத தொடர்பாக புகார் அளிக்க வந்த 2 குழந்தைகளின் தாய், மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியின் காலில் விழுந்து கதறி அழுது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மரணம் அடைந்துவிட்ட தனது கணவரின் குடும்பத்தினனர் தன்னை சித்ரவதை செய்வதாக கூறிய அந்த பெண், தன்னை கருணை கொலை செய்யுமாறு கெஞ்சியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Mayiladuthurai woman complains of her husbands brother sexually harassing her

மயிலாடுதுறை மாவட்டம் கீழையூர் காசா நகரில் வசித்து வந்த கனிமொழி என்ற அந்த பெண், மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தின் போது, தமது இரு குழந்தைகளையும் அழைத்து சென்று புகார் அளித்தார். அப்போது அவர், எஸ்பி மீனாவிடம் கூறும் போது, கணவரின் தம்பி தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்தார்.

கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி சரக டிஎஸ்பியை அழைத்து, பெண்ணிடம் விசாரித்து கணவர் வீட்டாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு மயிலாடுதுறை எஸ்பி மீனா உத்தரவிட்டார். இதுபற்றி அந்த பெண் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் வீட்டுக்காரர் 2018ம்ஆண்டே இறந்துவிட்டார்.. அதன்பிறகு என் மாமியார் வீட்டில் தான் வசித்து வந்தேன்.. என் அம்மா தான் தேவையான உதவிகளை செய்து வந்தார். என் கொழுந்தனாராலோ, மாமியாராலோ எந்த பயனும் இல்லை.. எந்த உதவியும் அவர்கள் செய்யவில்லை.. இப்படியான சூழலில் என் கொழுந்தனார் என்னிடம் டார்ச்சராக பேசி வந்தார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ரொம்பவும் பேசினார்.

Mayiladuthurai woman complains of her husbands brother sexually harassing her

கொல்லை பக்கமாக கல்லை விட்டு அடிப்பது, குச்சியை விட்டு எழுப்புறது.. ரூமில் ஜன்னலில் கையை விடுவது, குச்சியை விடுவது போன்றவற்றை என் கொழுந்தனார் செய்து வந்தார். இப்படி தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால், அறையின் ஜன்னல்களை நான் லாக் செய்துவிட்டேன்.. என் மாமியாரிடம் சொன்ன போது, அணுசரித்து தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்..

நான் கொழுந்தனிடமே, இப்படி பேசும் வேலை வைத்துக்கொள்ளாதே என்று கூறிய போது, நீ சொல்வதை நம்புவார்களா.. நான் சொல்வதை நம்புவார்களா என்று என்னை மிரட்ட ஆரம்பித்தார்.. இதனால் கொழுந்தனார் பேசும் அனைத்தையும் ரெக்கார்டு செய்தேன்.. ஆனால் என் செல்லில் ரெக்கார்டு இருப்பது தெரிந்ததும், என் மாமியார் செல்லை புடுங்கி உடைத்துவிட்டார். என்னிடம் இருந்த 3 பவுன் தாலி செயினையும் பறித்துக் கொண்டு அடித்து விரட்டி விட்டார். மகளிர் போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் அளித்த போது, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் மறுபடியும் டார்ச்சர் செய்தார்கள்.. இதனால் வேறு வழியில்லாமல் என் அப்பா வீட்டிற்கே வந்து விட்டேன்..

Mayiladuthurai woman complains of her husbands brother sexually harassing her

மாவட்ட ஆட்சியரிடம் இத்துடன் நான்காவது முறையாக மனு அளித்துள்ளேன்.. நான் மாவட்ட எஸ்பியை பார்த்து இன்று புகார் அளித்தேன். என்னை சீர்காழி டிஎஸ்பி ஆபிஸ்க்கு போக சொல்லியிருக்கிறார்.. நான் நான்காவது மாதத்தில் இருந்து புகார் அளித்து வருகிறேன்..இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. இதற்கு மேல் போராட சக்தி இல்லை.. இதனால் என்னுடைய அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் ஒப்படைத்துவிட்டு என்னை கருணை கொலை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தேன்" இவ்வாறு அந்த பெண் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+