வைகோவை மெர்சலாக்கிய விஜய்.. வசனங்களுக்கு மனதார பாராட்டு!

மெர்சல் படத்தில் உள்ள கருத்துகள் அனைத்திற்கும் எனக்கு உடன்பாடு உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வைகோவை மெர்சலாக்கிய விஜய்.. வசனங்களுக்கு மனதார பாராட்டு!-வீடியோ

    சென்னை: ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சரியான மருத்துவம் கிடைப்பதில்லை என்றும் மெர்சல் படத்தின் வசனங்கள் அனைத்திற்கும் தனக்கும் உடன்பாடு உள்ளது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தைப் பார்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, படத்தைப் பாராட்டியதோடு படத்தில் உள்ள கருத்துகளுடன் உடன்படுவதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

    ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்று எதிர்பார்க்க வைத்து தீபாவளிக்கு வெளியானது மெர்சல் திரைப்படம்.
    பாஜகவினர் தவிர அனைத்து தரப்பினரிடமிருந்தும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன.

    டிஜிட்டல் இந்தியா பட வசனம்

    டிஜிட்டல் இந்தியா பட வசனம்

    மெர்சல் படத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கூறினர். பாஜகவின் கருத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    படத்தை பாராட்டிய வைகோ

    படத்தை பாராட்டிய வைகோ

    மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் உள்ள அபிராமி தியேட்டரில் மெர்சல் படத்தைக் பார்த்து ரசித்தார். படத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, படம் மிகவும் சிறப்பாக இருந்தது.

    விஜய் நடிப்பு சூப்பர்

    விஜய் நடிப்பு சூப்பர்

    விஜய்யின் மூன்று தோற்றங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை அற்புதமாக உள்ளது. காட்சிப்பதிவும், வசனங்களும் சிறப்பாக உள்ளன. படத்தில் மருத்துவமனை சம்பந்தமாக தெரிவித்தக் கருத்துகள் அனைத்தும் தற்போதைய உண்மைநிலையையே விவரிக்கின்றன.

    பணம் பறிக்கும் மருத்துவமனைகள்

    பணம் பறிக்கும் மருத்துவமனைகள்

    ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சரியான மருத்துவம் கிடைப்பதில்லை. வென்டிலேட்டரில் வைத்தாலும் உயிர் போகும் என்று தெரிந்தும் பணம் பறிப்பதற்பாக சிகிச்சை செய்யும் மருத்துவமனைகள் இருக்கின்றன. இதே போல இறந்த பின்னர் ஒரு லட்சம் பணம் கட்ட சொல்லி மிரட்டும் மருத்துவமனைகள் உள்ளன. அதைத்தான் இந்த படத்தில் வசனமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரும் கருத்துக்கள் அனைத்திற்கும் எனக்கு உடன்பாடு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    விடுதலையானவர்களுடம் படம்

    விடுதலையானவர்களுடம் படம்

    பட்டதாரி இளைஞர்கள் சந்தர்ப்ப வசத்தால் சிறை செல்ல நேர்ந்தது. சில ஆண்டுகள் சிறையில் இருந்த அவர்கள் 5 நாட்களுக்கு முன்பு விடுதலையானார்கள். அவர்கள் திரைப்படம் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறினர். அவர்களுடன் இணைந்து இந்த படத்தை பார்த்தேன் என்று கூறினார் வைகோ.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+