தூத்துக்குடி: தாத்தாவின் பெருமையை காப்பாரா மதிமுக வேட்பாளர் ஜோயல்?
தூத்துக்குடி: தூத்துக்குடி லோக்சபா தொகுதியின் மதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் வழக்கறிஞர் எஸ். ஜோயல்
தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் அருகேயுள்ள லட்சுமி புரத்தில் சாமுவேல் நாடார், - எஸ்தர் தம்பதியினருக்கு 16-03-1973ல் பிறந்தார். சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்த ஜோயலுக்கு ஒரு அண்ணன்,மூன்று தங்கைகள் உள்ளனர்.
ஜோயலுக்கு மோனிகா என்ற மனைவியும், ஜோஸ்வா (9) அனுஷ்காமல்யா(4) என்ற மகளும் உள்ளனர்.

லட்சுமிபுரம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற ஜோயல், 1991ம் ஆண்டு சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். 8ம் வகுப்பு படிக்கும் போதே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
1993ம் ஆண்டு வைகோ திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது சேலம் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஜோயல் தன்னை மதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தீவிர விசுவாசியாக இருக்கும் ஜோயல், அவரது ஆலோசனைப் பெற்றே பணியாற்றி வருகிறார்.
எஸ்.ஜோயலின் தாத்தா, சாமுவேல் நாடார், பெருந்தலைவர் காமராஜருடன், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.
தமிழகத்தில் 1958ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது, தூத்துக்குடி தொகுதியின் முதல் வேட்பாளராக, பெருந்தலைவர் காமராஜரால் களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர், கக்கன், வெங்கட்ராமனுடன் இணைந்து பணியாற்றவர் சாமுவேல்நாடார். அவரது பேரனும் தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் எஸ். ஜோயல் லோக்சபா தொகுதியின் மதிமுக வேட்பாளராக களம் காண்கிறார். பலமுனைப் போட்டியில் தொகுதியை வெல்வாரா ஜோயல்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications