மேல்மருவத்தூர் இருமுடி திருவிழா: கோவை, நெல்லை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கவும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Melmaruvathur Irumudi festival Southern railway announce Special Trains

சிறப்பு ரயில்கள் விபரம்:

ரயில் எண் 06756,ஜனவரி 18,20,25,27 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு மேல்மருவத்தூர் வந்தடையும்.

ரயில் எண் 06755, ஜனவரி 19,26 ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி,விருத்தாசலம் விழுப்புரம், மேல்மருத்தூரில் நின்று செல்லும்.

நாகர்கோவில் - செங்கல்பட்டு

ரயில் எண் 06758, ஜனவரி 22,29 ஆம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

ரயில் எண் 06757, ஜனவரி 23, 30 ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

ரயில் எண் 06759, ஜனவரி 21,28 ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 3.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நின்று செல்லும் இடங்கள்

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 30ஆம் தேதி தொடங்கியுள்ளது.

கோவை - செங்கல்பட்டு

வண்டி எண் 06626 கோவை-செங்கப்பட்டுக்கு டிசம்பர் 11, 14, 16, 18, 21, 23, 25, 28 மற்றும் 30ஆம் தேதியும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 1, 4, ,6 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29 தேதிகளிலும் மற்றும் பிப்ரவரி 1 மற்றும் 3ஆம் தேதிகளில் கோவையில் இருந்து இரவு 10.50 மணிக்கு ரயில் புறப்படும். இந்த ரயில் அதிகாலை 3.15 மணிக்கு திருச்சி வந்து செங்கல்பட்டு புறப்பட்டு செல்லும்.

வண்டி எண் 06625 செங்கல்பட்டு-கோவைக்கு டிசம்பர் 12, 15, 17, 19, 22, 24, 26, 31 மற்றும் அடுத்த ஆண்டு (2015) 2, 5, 7, 9, 12, 14, 16, 21, 23, 26, 28, 30 மற்றும் பிப்ரவரி 2 மற்றும் 4ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மாலை 7 மணிக்கு ரயில் புறப்படும். இந்த ரயில் இரவு 10.15 மணி க்கு திருச்சி வந்து கோவைக்கு புறப்பட்டு செல்லும்.

இந்த ரயில்கள் சோமனூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூரில் நின்று செல் லும். இந்த ரயில் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும்.

ராமேஸ்வரம் - செங்கல்பட்டு

வண்டி எண் 06752 ராமேஸ்வரம்-செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில் டிசம்பர் 15, 17, 22, 24, 29, 31ஆம் தேதிகளிலும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 5, 7, 12, 14 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இரவு 8.50 மணிக்கு திருச்சி வந்து செங்கல்பட்டுக்கு புறப்படும்.

வண்டி எண் 06751 செங்கல்பட்டு-ராமேஸ்வரத்திற்கு டிசம்பர் 16, 18, 23, 25, 30ம் தேதிகளிலும் ஜனவரி 1, 6, 8, 13, 15ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு திருச்சி வந்து பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டு செல்லும்.

இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். இந்த ரயில் வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும்.

வாராந்திர ரயில்

அதுபோல் வண்டி எண் 06754 ராமேஸ்வரம்-செங்கல்பட்டுக்கு வாராந்திர ரயில் டிசம்பர் 19, 26 மற்றும் ஜனவரியில் 2, 9 மற்றும் 16ஆம் தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 8.50 மணிக்கு வந்து பின்னர் செங்கல்பட்டுக்கு புறப்படும்.

வண்டி எண் 06753 செங்கல்பட்டு-ராமேஸ்வரத்திற்கு டிசம்பர் 20, 27 மற்றும் ஜனவரியில் 3, 10, 17ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு திருச்சி வந்து பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டு செல்லும்.

இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+