குமாரபாளையம் அருகே கோர விபத்து.. வேனும் மினி லாரியும் மோதி 5 பெண்கள் பலி.. 20 பேர் படுகாயம்
வேனும்-லாரியும் மோதியதில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
Recommended Video

நாமக்கல்: குமாரபாளையம் அருகே வேனும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே உள்ளது வெப்படைப் பகுதி. இங்கு ராஜகுரு ஸ்பின்னிங் மில்ஸ் என்ற நூற்பாலைக்கு இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று இந்த நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

நாணத்தண்டு பள்ளம் என்ற இடம் அருகே வந்தபோது, திடீரென வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் எதிரே வந்து கொண்டிருந்த மினி லாரி மீது நேருக்கு நேர் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனின் முன்பகுதி பயங்கர சத்தத்துடன் நொறுங்கியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த குமாரபாளையம் போலீசார் உயிருக்கு போராடியவர்களை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தொடர்ந்து படுகாயமடைந்தோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேனின் ஸ்டியரிங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications