பார்ட் டைம் அரசியல்வாதியாம்... அரிய கண்டுபிடிப்பு ரஜினி: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினியை கலாய்க்கும் ஜெயக்குமார்?-வீடியோ

  சென்னை: அரசியலில் பார்ட் டைம் அரசியல்வாதி என்று கண்டுபிடித்த ரஜினி ஒரு ஆன்மிக ஞானி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றுள்ள நடிகர் ரஜினி காந்த், டேராடூனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ரஜினி அரசியல் பேசுவதில்லை என கமல் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  Minister Jayakumar criticises Rajinikanth

  இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் தான் அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இதுஆன்மிக பயணம் என்றும் அரசியல் பேசும் இடமில்லை என்றும் தெரிவித்தார். இன்னும் தான் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை என்றும் அரசியல் கட்சி கூட தொடங்கவில்லை என்றார்.

  இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்களிடம் கேட்டபோது அவர் கூறுகையில்,

  நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதாக கூறுகிறார். உலகத்திலேயே அரசியல்வாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆன்மிகவாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அரசியலில் ஒரு பகுதிநேர அரசியல்வாதி என்று கண்டுபிடித்த ஒரே ஆன்மிக ஞானி ரஜினிதான்.

  இன்னும் 3 மாதத்தில் கழித்து அரசியலில் தற்காலிக ஊழியராக (கேசுவல் லேபர்) இருப்பேன் என்பார். ஸ்டாலின் முதலில் செஞ்சிக்கோட்டை ஏறட்டும், பின்னர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏறலாம்.

  வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி நமக்கு குறைந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் ஜெயக்குமார்.

  பார்ட் டைம் அரசியல்வாதி என்று கண்டுபிடித்தவர் ரஜினிதான்- அமைச்சர் ஜெயக்குமார்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister Jayakumar says that Rajinikanth discovers rare detail that he is part time politician.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற