அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் - மைத்ரேயன் எம்.பி 'அசால்ட் கமெண்ட்'
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி கருத்துத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்: தமிழக அமைச்சர்களிலேயே ஜோக்கர் ஜெயக்குமார் தான் என மைத்ரேயன் எம்.பி விமர்சித்துள்ளார்.
திருவள்ளூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மைத்ரேயன் எம்.பியிடம் அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மைத்ரேயன் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தார்.

அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் தான் பேச்சுவார்த்தை பின்னடைவுக்குக் காரணமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'அமைச்சர்களிலேயே ஜெயக்குமார் தான் ஜோக்கர்' என மைத்ரேயன் எம்.பி கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சர்களும் ஒபிஎஸ் அணியைச் சார்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வந்ததால், பேச்சுவார்த்தை பின்னடவை சந்தித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி அணியிலும் ஒபிஎஸ் அணியிலும் பேச்சுவார்த்தை நடத்த சுமூகமான சூழ்நிலை உருவாகி வருவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், மைத்தேரயன் எம்.பி அமைச்சர் ஜெயக்குமாரை ஜோக்கர் என கூறியுள்ளதால் இணைப்பு பேச்சு வார்த்தை பின்னடைவைச் சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் ஜெயக்குமாரை ஓபிஎஸ் அணியினரும் தினகரன் அணியினரும் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications