பெரியபாண்டி குடும்பத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆறுதல்
ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியின் குடும்பத்தினரை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற இடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் குடும்பத்தினரை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 16-ஆம் தேதி கொள்ளையர்கள் சிலர் மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் மறைந்திருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் பாலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனர்.
இன்று அதிகாலை அவர்களை பிடிக்க முயன்ற போது அங்கு மறைந்திருந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மதுரவாயல் காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டி வீரமரணம் அடைந்தார்.
மேலும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆவடியில் உள்ள பெரியபாண்டியின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வீரமரணம் அடைந்த பெரியபாண்டியின் உடலை மதுரைக்கு அழைத்த வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களின் குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications