அரசியலுக்கு வருவது ரஜினி உடல்நலன், குடும்பத்துக்கு நல்லதல்ல... ஓ.எஸ். மணியன் அடேங்கப்பா கருத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அவருடைய மனம் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அவருடைய உடல்நிலை ஏற்றுக்கொள்ளாது. எனவே அவர் அரசியலுக்கு வருவது உடல்நலத்துக்கும் குடும்பத்துக்கும் நல்லதல்ல என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ரஜினியின் அரசியல் வருகை குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் அவர், ரஜினி அரசியல் களத்திற்கு வருவார் என்றால் அதை அவருடைய உடல் ஏற்றுக்கொள்ளாது.

Minister O.S.Maniyan requests that Rajini may reconsider his stand on political entry as it will affect his health

அவருடைய மனம் வேறாக இருக்கலாம், எண்ணங்கள் வேறாக இருக்கலாம் ஆனால் உடல் ஏற்றுக் கொள்ளாது. அரசியல் பிரவேசம் வருவது என்பது அவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்வது நல்லது.

அரசியல் பிரவேசம் என்பதுநடிகர் ரஜினியின் உடல்நிலைக்கும், அவருடைய குடும்பத்திற்கும் நல்லதல்ல என்பதே என்னுடைய கருத்து என்று அமைச்சர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu handlooms department minister O.S.Maniyan told to reporters at Nagapattinam that Rajini's Political entry is not good for his health and family.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற