ச்சே... அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் ஒரு பொழப்பா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டென்ஷன் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் ஒரு பொழப்பா என செய்தியாளர்களிடம் ஏகத்துக்கும் கோபமடைந்தார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை விமான நிலையத்துக்கு வந்த போது செய்தியாளர்கள் அவரிடம் பால் கலப்படம் குறித்து அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டனர். அப்போது, நீங்கள் தற்கொலை செய்துகொள்வேன் என கூறினீர்களே என கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் பாலில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன் என கூறவில்லை. நான் தனியார் பால் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டேன் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என கூறினேன் என ஆவேசமாகக் கூறினார்.

 Minister Rajendra balaji slams his own party people in chennai airport

அப்போது ஒரு நிருபர், நீங்கள் கமிஷன் பெற்றுக்கொண்டதாக உங்கள் கட்சியினரே சொல்கிறார்களே என்ற கேள்விக்கு ஏகத்துக்கும் டென்ஷன் ஆனார் அமைச்சர்.அதோடு மிகுந்த படபடப்போடு, 'ஒரு நிறுவனத்தின் மீது குற்றம் இருக்கிறது என உண்மையைக் கூறினால் உடனே கமிஷன் கேட்டார் என கூறுவதெல்லாம் ஒரு பொழப்பா... இதுதான் அரசியலா' என கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Accusing a minister that he is getting bribe is a way of criticizing? is it a way of life for politician minister Rajendra balaji asked angrily.
Please Wait while comments are loading...