வர்தா.. அவசர கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் அமைச்சர் உதயகுமார் அவசர ஆலோசனை #Vardah
வர்தா புயல் முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயகுமார் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். நேற்றும் அவர் பல துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
சென்னை: வர்தா புயல் முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயகுமார், சென்னையிலுள்ள மாநில எமர்ஜென்சி கட்டுப்பாட்டு அறையில் மாநில அதிகாரிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை அருகே இன்று கரையை கடக்க இருக்கும் 'வர்தா' புயலை சமாளிப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசர ஆலோசனை கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய்துறை செயலாளர் சந்திரமோகன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், பேரிடர் மேலாண்மை இயக்குனர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
"'வர்தா' புயலால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள சென்னை, காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு தலா 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 160 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். காஞ்சீபுரத்தில் ஒரு பேரிடர் மீட்பு குழுவில் 40 வீரர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்" என அமைச்சர் உதயகுமார் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையிலுள்ள மாநில எமர்ஜென்சி கட்டுப்பாட்டு அறையில் மாநில அதிகாரிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications