லஞ்சப்புகார் குற்றச்சாட்டு... அறிக்கை வெளியிடுவாராம் அமைச்சர் சரோஜா
தன் மீதான லஞ்சப்புகார் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவேன் என்று அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.
சென்னை: அதிகாரி ராஜ மீனாட்சி சுமத்தியுள்ள லஞ்சப்புகார் குற்றச்சாட்டு குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவேன் என்று சமூக நலத்துறை அமைச்சர் சரேஜா கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் ராஜமீனாட்சி. இவர் தமிழக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பணியிட மாறுதலுக்கு ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்டார் அமைச்சர் சரோஜா என்பது மீனாட்சியின் புகார். குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் ரூ.30 லட்சம் தரவேண்டும் என்று அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் மிரட்டல் விடுத்தாக நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார்.
கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் எந்த சூழ்நிலையிலும் பணியை விட்டு விலகமாட்டேன் என்றும் மீனாட்சி கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை பற்ற வைத்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து வாய் திறக்காமல் இருந்தார் அமைச்சர் சரோஜா.
அமைச்சர் சரோஜாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வந்த சரோஜா, தன் மீதான லஞ்ச மற்றும் மிரட்டல் புகாருக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications