ரஜினி ஒரு வியாபாரி இன்றைக்கு ஒன்று பேசுவார் நாளைக்கு ஒன்று பேசுவார்.. போட்டுத்தாக்கும் அமைச்சர்!
ரஜினி ஒரு வியாபாரி அவர் இன்றைக்கு ஒன்று பேசுவார் நாளைக்கு ஒன்று பேசுவார் என அமைச்ச செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: ரஜினி ஒரு வியாபாரி அவர் இன்றைக்கு ஒன்று பேசுவார் நாளைக்கு ஒன்று பேசுவார் என அமைச்ச செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப் போகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சியின் இறுதி நாளில் பேசிய அவர், அரசியலில் எதிர்ப்பு தான் பலம் என்றும் தயாராக இருங்கள் போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
அவரது இந்த பேச்சு தனது அரசியல் பிரவேசத்தை உறுதிபடுத்துவதாக இருந்தது. இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

எம்ஜிஆருக்குப் பிறகு என்னாச்சு?
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எம்ஜிஆருக்குப் பிறகு கட்சி தொடங்கியவர்கள் கதி என்னாச்சு என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.

கட்சி ஆரம்பிச்சவங்க..
சிவாஜிகணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த் என கட்சி தொடங்கியவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், அவர்களின் கதி என்னவாயிற்று என மக்கள் நன்கறிவார்கள் என்றார். மேலும் இதனை ரஜினியும் நன்கு அறிவார் என்றும் அவர் கூறினார்.

ரஜினி ஒரு வியாபாரி
எனவே ரஜினி கூறியதை பற்றியெல்லாம் கவலைக்கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். ரஜினி ஒரு வியாபாரி, அவர் இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார் என்றும் அவர் சாடினார்.

சிஸ்டம் கெட்டுப்போகவில்லை
தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப்போயிருப்பதாக ரஜினி கூறியது குறித்தும் செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை என்றார்.

மக்கள் தவிர்த்து விட்டனர்
மேலும் நடிகர்கள் பின்னால் போவதை மக்கள் தவிர்த்து விட்டனர் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications