அமைச்சர்களின் இமெயில் முகவரி நீக்கம்... செங்கோட்டையன் சொல்வதை பாருங்க - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: இணையதளத்தில் அமைச்சர்களின் புகார் பிரிவு நீக்கப்பட்டது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்ற வேளாண் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இணையதளத்தில் அமைச்சர்களின் புகார் பகுதி நீக்கப்பட்டுள்ளது குறித்து முதல்வருக்கு தெரிவிக்கப்படும் என்றார். இமெயில் முகவரிகள் நீக்கப்பட்டது பற்றி முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

Minister Sengottaiyan says about complaint part deleted issue

பள்ளிக் கல்வித் துறையில் புதிய பாடத்திட்டங்கள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னோடி மாநிலமாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3 ஆண்டுகாலத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் படிப்படியாக மாற்றப்படும். தமிழக முதல்வர் தலைமையிலான கல்வி துறை எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sengottaiyan says that CM will take necessary action in the issue of minister's complaint section deletion.
Please Wait while comments are loading...