சாட்டையை சுழற்றிய செந்தில் பாலாஜி.. அப்பவே எச்சரிக்கை விடுத்தாரே.. இப்போ பாருங்க.. பக்கா ஆக்சன்
தென்காசி: மது பாட்டிலுக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலித்த டாஸ்மாக் விற்பனையாளருக்கு டாஸ்மாக் நிர்வாகம் கடும் அபராதம் விதித்து, அவர் மீது கடும் நடவடிக்கையும் எடுத்துள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.
ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.
அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது.
இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக்கிலேயே இப்படி மதுவில் சயனைடு கலந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. இது போல டாஸ்மாக்கில் மதுபானங்களுக்கு கூடுதலாக பணம் வைத்து விற்பனை செய்வது, கூடுதலாக 20 - 30 ரூபாய் காசு கேட்பது போன்ற முறைகேடுகளும் நடந்து வருகின்றன.
இந்த முறைகேடுகளை, விபத்துக்களை தவிர்க்க வசதியாக டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அறிக்கை தயார் செய்யப்பட்ட பின் டாஸ்மாக் கவுண்டர்களில் சிசிடிவிக்கள், பொருத்தப்படும்.
அதேபோல் உள்ளே பார்களிலும் சிசிடிவிக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக பார்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவே கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று முன்னரே அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்து இருந்தார். மது பாட்டிலுக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலித்த டாஸ்மாக் விற்பனையாளருக்கு டாஸ்மாக் நிர்வாகம் கடும் அபராதம் விதித்து, அவர் மீது கடும் நடவடிக்கையும் எடுத்துள்ளது.
என்ன நடந்தது? : தென்காசியில் உள்ள ஒரு கடையில் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலித்த டாஸ்மாக் விற்பனையாளருக்கு ரூ.5,900 அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு டிப்போவிற்கு மாற்றப்பட்டார்.

எம்ஆர்பியுடன் கூடுதலாக ஐந்து ரூபாய் சேர்த்து டாஸ்மாக் பில் போட்டுள்ளார் அந்த ஊழியர். இது தொடர்பாக புகார் கொடுத்த நபர், அவுட்லெட்டில் எண் 10913ல் நான் இரண்டு கால் பாட்டில் ஜூனோ வோட்கா பாட்டில்களைக் கேட்டேன். ஒரு பாட்டிலின் MRP அதன் லேபிளில் அச்சிடப்பட்டிருந்தபடி ரூ. 260. ஆனால், விற்பனையாளர் என்னிடம் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 265 ரூபாய் வலுக்கட்டாயமாக வசூலித்தார். கூடுதல் பணத்தை என்னிடம் திருப்பித் தர மறுத்துவிட்டார்", என்று புகார்தாரர் கூறினார்.
அந்த நபர் மேலாளரிடம் புகார் அளித்த போதிலும், அதே கடையின் ஊழியர்கள் தொடர்ந்து நுகர்வோரிடம் இருந்து கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கின்றனர் என்று அந்த நபர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கூடுதலாக 5 ரூபாய் வசூலித்த டாஸ்மாக் விற்பனையாளருக்கு ரூ.5,900 அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு டிப்போவிற்கு மாற்றப்பட்டார்.











Click it and Unblock the Notifications