அமைச்சர் சீனிவாசன் செருப்பை சரி செய்த எம்எல்ஏ ஈஸ்வரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பவானி: தேக்கம்பட்டியில், யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இன்று துவக்கி வைத்தார். யானையின் வாயில் சாப்பாடு கொடுத்து அதை தட்டிக்கொடுத்தார் சீனிவாசன். இந்த நிகழ்ச்சியில், பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ, ஈஸ்வரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, சீனிவாசன், சாதாரண ரப்பர் செருப்புதான் அணிந்திருந்தார். அந்த செருப்பும் திடீரென பழுதானது. செருப்பு வார் பகுதி, அடிப்பகுதியில் இருந்து தனியாக வந்துவிட்டது.

Minister Srinivasan's cheppal repaired by Bavani Sagar MLA Eswaran

இதை பார்த்த ஈஸ்வரன், உடனே குனிந்து, சீனிவாசன் செருப்பை சரி செய்து கொடுத்தார். இந்த காட்சி சுற்றியிருந்த ஊடகவியலாளர்கள் கேமராக்களில் பதிவாகிவிட்டது.

ஈஸ்வரன் இவ்வாறு செய்தபோது, சீனிவாசன் அதை தடுக்கவில்லை. சுற்றிநின்ற யாருமே இதை ஒரு பெரிய விஷயமாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. சாமானியமாகவே அதை கடந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Minister Srinivasan's slipper was repaired and gave it to him by Bavani Sagar MLA Eswaran. The journalists surrounding them were recorded this scene on cameras.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற