புதுக்கோட்டை: விபத்தில் சிக்கிய தம்பதியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர்

தனது சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் காரில் சென்றார்.
அப்போது அன்னவாசலைக் கடந்து குருக்கலையாபட்டி அருகே வந்த போது சாலையின் ஒரு புறம் மோட்டார் பைக்கும், மறுபுறம் 26, 28 வயது மதிக்கத்தக்க கணவன், மனைவியும் சுய நினைவின்றி மயங்கிக்கிடந்ததைப் பார்த்தார்.
உடனே காரை நிறுத்தி இறங்கிச்சென்று பார்த்து இருவருக்கும் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்த அவர், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தார்.
ஆனாலும் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், அமைச்சர் தனது காரில் காயமடைந்த இருவரையும் ஏற்றி புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனை அதிகாரிகளுக்கு போனில் தகவல் தெரிவித்து உரிய சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள கட்சி நிர்வாகி அனுப்பி வைத்த மாற்று வாகனத்தில் புதுக்கோட்டைக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார்.
விபத்தில் சிக்கிய இருவரும் புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன், ரேவதி எனத்தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த காயமடைந்தவர்களின் உறவினர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications